உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

வீண்செலவு வு குறைய எல்லா எய்துவரென்பது திண்ணம்.

6

நலங்களு

313

நம்நாட்டவர்

ஆதலால், திருக்கோயில்கள் திருமடங்களின் திரண்ட செல்வத்தில் ஒரு பெரும் பகுதியைக் கொண்டு ஆங்கில அரசினரே முனைந்துவந்த தமிழ் ஆங்கிலக் கல்லூரிகள் நிறுவி, அவற்றில் ஏழை எளிய தமிழ் மாணவர்க்கு உணவும் உடையும் உறையுளும் நூல்களும் அளித்து, அவர்க்கு ஏதொரு குறையும் நேராமற் பாதுகாத்துத், தமிழ் ஆங்கில மொழிக் கல்வியுஞ் சமயநூற் கல்வியுந் தொழிற்கல்வியுங் கற்பித்து வருதல் வேண்டும்; தமிழாசிரியர்க்குந் தமிழ் ஆங்கிலநூல் ஆராய்ந் தெழுதும் நல்லிசைத் தமிழ்ப்புலவர்க் குஞ் சொற்பொழிவுகள் நிகழ்த்தும் நாவலர்க்கும் அங்ஙனமே மிகுதியாகப் பொருளுதவியும் பிறவுதவிகளுஞ் செய்துவரல் வேண்டும்.

இன்னுந், திருக்கோயில்கள் திருமடங்கள் கல்லூரிகள் சத்திரஞ் சாவடிகளில் முறையே இறைவனைத் தொழவுஞ் சமயநூல் ஓதவுங் கலைகள் பயிலவும் உணவும் இடமும் பெறவும் வருவாரைச், சாதி வேறுபாடு சமய வேறுபாடு கருதாமல், எல்லாரையும் அன்பாக நடாத்தி அவரவர்க்கு வேண்டுவன உவந்து அளிக்க ஒழுங்கு செய்தல் வேண்டும்.

இனித் திருக்கோயில்களுக்கு இன்றியமையாத் திருப்பணிச் செலவுக்கும் வழிபாட்டுச் செலவு திருவிழாச் சலவுக்குமன்றி, இக்காலத்திற்கு இயையாத பிறவழிகளில் எவரும் வீணே பெரும்பொருளைச் செலவிடலாகாது. ஆயிரத்து முந்நூறாண்டுகளுக்கு முன்னமேயிருந்த

தெய்வத்திருமூலர்,

“படமாடற் கோயிற் பகவற்குஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா; நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில் படமாடக் கோயிற் பகவற்கு அஃது ஆமே'

என்றருளிச் செய்த திருப்பாட்டாற், கோயிலுக்குச் செலவு செய்யும் பொருள் அடியார்க்குப் பயன்படாமற் போதலும், அடியார்க்குதவும் பொருள் சிவபிரானுக்கே செய்ததாக ஏற்கப்படுதலும் நன்கு வலியுறுத்தப்பட்டமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/338&oldid=1593073" இலிருந்து மீள்விக்கப்பட்டது