உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

மறைமலையம் - 31 சத்திரஞ்சாவடிகள்

கட்டி

இன்னுஞ், அவற்றிற் பார்ப்பனரையே மேற்பார்ப்பவராக அமர்த்துகின்றனர் அறஞ் செய்வோர். ஆனால், அங்ஙனம் அவற்றில் அமர்த்தப் படும் பார்ப்பனரோ, தமிழரில் உயர்ந்தோரான சிவனடி யார்கள் வரினும் அவர்க்கு அச்சத்திரஞ் சாவடிகளிற் சிறிதுநேரமுந் தங்க இடந்தருவதில்லை; அடியார்க்கே அங்ஙனமானால், ஏனைத் தமிழ்ப் பொதுமக்களுக்கு அப் பார்ப்பனர் அவற்றில் இடந்தராமல் அவரைத் துரத்துதலை யாம் விண்டுவிளம்பு தலும் வேண்டுமோ? பொதுவாகப் பார்ப்பனர் ஈரநெஞ்ச மில்லாதவராயுந், தமிழரிற் சிவனடியார்கள் அருள்பெருகு ஈரநெஞ்ச முடையராயும் இருத்தல் நன்கு கண்டே திருமூலர் எத்தகைய அறமும் பார்ப்பனர்க்குச் செய்தலாகாதென்றுஞ், சிவனடியார்க்கே எத்தகைய அறமுஞ் செய்தல் வேண்டு மென்றும் வற்புறுத்தி,

66

"அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில்என்? சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கில்என்? பகரும் ஞானி பகல்ஊண் பலத்துக்கு நிகரிலை என்பது நிச்சயந் தானே”

என்றும்,

"ஆறிடும் வேள்வி அருமறை நூலவர் கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில், நீறிடும் தொண்டர் நினைவின் பயன்நிலை பேறெனில் ஓர்பிடி பேறுஅது வாகுமே

وو

என்றும் அருளிச்செய்தார். எனவே, கோயில்களுக்கு அளவுக்கு மேற்செய்யுஞ் செலவும், பார்ப்பனருக்குச் செய்யும் அறமும் பயன் இலவாதலும், எல்லாம்வல்ல சிவ பிரானுக்கு அகங்கரைந்துருகித் தொண்டு புரியும் அடி யார்க்கும், அறிவுநூல் வல்ல சான்றோர்க்குஞ் செய்யும் அறங் களே மெய்ப்பயன் றருதலும் நம் செந்தமிழ்ச் சான்றோர் அருளிய மெய்யுரைகளால் நன்கு விளங்கா நிற்றல் கண்டு கொள்க.

அடிக்குறிப்புகள்

1.

Self-Government.

2.

Democratic Government.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/339&oldid=1593074" இலிருந்து மீள்விக்கப்பட்டது