உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315

நட

இனி,

ஐ. சடங்குகள்

மணச்சடங்கு பிணச்சடங்குகள்

முதலியன வெல்லாந் தமிழர்கள் தம்முடைய தமிழ்மறைகளைக் காண்டே நடத்துவதில் விடாப்பிடியாய் நிற்றல் வேண்டும். அவற்றைத் தம்முள் தமிழறிந்த ஒரு பெரியாரைக் கொண்டே ப்பித்தலும் வேண்டும். ஒருகாலும் பார்ப்பனரைக் கொண்டு இறந்துபோன வடமொழியில் அவற்றை நடத்துதல் ஆகாது. மணஞ்செய்துகொண்டு எல்லா வளனும் நிரம்ப நீடு வாழ விழைவோர், எல்லா வளனுங் கெழுமி எத்தனையோ ஆயிர ஆண்டுகளாக நந் தமிழ்மக்களை நாகரிக வாழ்க்கையில் வளர்த்து ன்னும் அவர்களை வாழச்செய்யும் வகையில் உயிரோடு உலவிவரும் நமதருமைச் செந்தமிழ் மொழியில் அதனை நடத்திக் கொள்ளல் வேண்டுமேயன்றிப், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமே இறந்துபட்டு எவர்க்கும் பயன்படாதாய் ஒழிந்து போன சமஸ்கிருதம், இலத்தீன் முதலான மொழிகளில் அதனை நடத்திக் கொள்ளுதல் ஆகாது.

இனி, மணச்சடங்கு பிணச்சடங்குகளை வாளா பெருக்கி, அவற்றிற்காகப் பெரும் பொருளைச் செலவிட்டுப், பின் தீராக்கடனுக்கு ஆளாகி வாணாள் முழுதும் அல்லற்பட்டு அலைக்கழிதல் நந்தமிழர்க்குச் சிறிதும் ஆகாது. ஆதலால், இச்சடங்குகளை மிகக் குறைந்த செலவில் ஒன்றிரண்டு நாட்களில் நடாத்தி முடித்து விடுதலே அனைவருக்குஞ் செயற்பாலதாகும். அறஞ் செய்தற்கு ஏற்ற அளவு பொருள் படைத்தவர்கள் இச்சடங்கு நாட்களில் ஏழை எளிய தமிழ் மாணவர் தமிழாசிரியர்க்குந் தமிழ்நூல் இயற்றும் புலமையோர்க்குந், தக்கார் பிறர்க்கும் அவரவர் விரும்புந் துறைகளிற் பொருளுதவியும் பிறவுதவியுஞ் செய்தல் வேண்டும் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/340&oldid=1593075" இலிருந்து மீள்விக்கப்பட்டது