உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

ஒ. துறவொழுக்கமுந் தவப்பயிற்சியும்

இனி, இல்லறத்தார் வேறு துறவறத்தார் வேறு என்னுந் தவறான கருத்தை நந்தமிழ் மக்கள் அறவே ஒழித்துவிடல் வேண்டும். பண்டைத் தமிழர்க்குள் இத்தகைய வேறுபாடு சிறிதுமே இருந்ததில்லை. பௌத்தர் சமணர் இந்நாட்டிற்கு வந்த பிற்காலத்திலேதான் இவ்வேறுபாடு உண்டாயதூஉம், அதனைத் தமிழ்மக்கள் ஒருவாறு தழுவியதூஉம் ஆகும் என்பதனை முன்னரே விளக்கியிருக்கின்றேம். ஆயினும், பிற்காலத்துப் புகுந்த இவ்வறம் இரண்டையுந் தழீஇச் சில சீர்திருத்த வுரைகள் பகர்வாம்.

ஆசிரியர் திருவள்ளுவர், அகப்பற்று நீங்கி இறை வன்றிருவடிக்கட் பதிந்த அன்பு துளும்பும் நெஞ்சமுடைய வரையே துறவிகள் எனக் கொண்டார்! இந்நிலை வாயாமற் புறத்தே துறவுகோலம் மட்டுந் தாங்கியவரை துறவிகளெனக் கொண்டிலர்; இது,

L

"நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்”

என்றும்,

“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின்”

அவர்

(குறள் 276)

(குறள் 280)

என்றும் அவர் அருளிச் செய்திருத்தலால் தெற்றென விளங்கா நிற்கின்றது. உலகியன் முயற்சிகளை நடாத்தி இம்மையின்பந் துய்த்து வந்த ஓர் ஆண்மகனும் அவன்றன் மனைவியுந் தமது வாழ்நாளின் பிற்பகுதியில் அவ்வுலகியன் முயற்சிகளையும் அறத்தையுந் தம் புதல்வர் மேலுஞ் சுற்றத்தார் மேலும் ஏற்றி வைத்துத் தாம் அவரால் ஓம்பப் பட்டபடியே ஒருங்கிருந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/341&oldid=1593076" இலிருந்து மீள்விக்கப்பட்டது