உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழர் மதம்

317

இறைவன் றிருவருளின் பத்திற் றோய்ந்த கருத்தினராய்த் தவஞ்செய்தல் வேண்டு மென ஆசிரியர் தொல்காப்பியனாருந் திருவள்ளுவர் காலத்திற்கு மூவாயிரமாண்டு முன்னமே 'காமஞ்சான்ற" என்னுஞ் சூத்திரத்திற் கூறியிருப்பதனை முன்னமே விளக்கிக் காட்டினாம். ஆகவே, அன்பும் அருளும் இன்றித் தம் மனைவி மக்களைத் துறந்து சென்று தவத்திலமர்தல் தமிழாசிரியர்க்கு உடம்பாடாகாமை நன்கு பெற்றாம். பெறவே, தமிழ்மக்கள் அனைவருந் தவக்கோலம் பூண்டோ பூணாமலோ தம்மில்லத்தே தனியிடம் வகுத்துக் கொண்டு அதன்கணிருந்தவாறே தவமுயற்சியைச் செய்தலே சிறந்த முறையாகும்.

இனித், தம் மனைவி மக்கள் முதலாயினார் தமது தவ முயற்சிக்கு மாறாய் நிற்றலினாலோ, தமது தவமுயற்சிக்கு முழுதும் இசைந்து துணையாய் நின்ற அல்லது நிற்கவல்ல தம் அன்புள்ள மனைவி இறந்து பட்டமையினாலோ, தம் புதல்வர்கள் உயர்ந்த நோக்கமின்றிப் பொருட்பற்று நிரம்ப உடையராய்த் தமக்குந் தமது தவத்திற்கும் இடையூறு இழைப்பவரா யிருத்தலினாலோ, இன்னோரன்ன பிற வலிய காரணங்களாலோ தங் குடும்பத்தாருடன் கூடியிருந்து தவஞ் செய்தல் இயலாதெனக் கண்டு, இவ்வெல்லாரையும் நீத்தகன்று தனித்துறவு வாழ்க்கை நடாத்த விரும்புவோர் அவ்வாறே செய்தலிலும் இழுக்கொன்றும் இல்லை. ஆனாலுந் தனித்துறவிலும் பல அல்லல்கள் இருக்கின்றன. பாலும் பழனுந்

தான் வேண்டும்போதெல்லாம் அருந்தத் தக்கவாறு

அருகேயிருக்கப் பெற்றானுக்கு அவற்றை அருந்துதலில் வேட்கை மிகுதியாய்ச் செல்லாது; மற்று அவை கிடைக்கப் பறாதானுக்கோ அவற்றின்கண் வேட்கை மிகுதியும் உண்டாதல் இயற்கை. அது போலவே, இம்மையின்ப நுகர்ச்சிக்கேற்ற பொருள்களும் மனைவியும் என்றுந் தன்பால் இருக்கப் பெற்றானுக்கு அப் பொருள் களையும் மனைவியையும் நுகர்தலிற் கருத்து மிகுதி யாய்ச் செல்லாது; மற்று, அவற்றையும் அவளையுந் துறந்து சென்றானுக்கோ அப்பொருள்களையும் மனையாளையும் நுகர்தலில் விழைவு மீதூர்ந்து நிற்கும்; அதனால், அவன்தான் மேற்கொண்ட துறவொழுக்கத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/342&oldid=1593077" இலிருந்து மீள்விக்கப்பட்டது