உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

மறைமலையம் - 31

பெரிதும் இழுக்குவன். இவ்வியல்பினைத் தனித் துறவு பூண்டார் பெரும்பாலாரிடம் எல்லாரும் இன்றுங் காண்கின்றனர். ஆதலால், ஐம்புல அவாக்களும் முழுதும் அடங்கப் பெற்ற அல்லது அடக்கவல்ல நிலையினரே

முழுதும்

தனித்துறவிலமர்தல் நன்றென்றறிதல் வேண்டும்.

தனித்துறவி லமர்ந்தாரும்

பெருங்காயமிருந்த

தவ

பாண் டம் போல இம்மையின்ப வேட்கை எழப் பெறுவரேல், தமக் கேற்ற ஒரு மாதரைத் துணையாகப் பெற்றோ, அல்லது மீண்டும் ஒரு மாதரை மணந்தோ துறவு நடாத்துதலே முறையாம். வடநாட்டிலிருந்த முனிவர்களுந் தத்தமக்கேற்ற மனைவிமாருட னிருந்தே தவம் புரிந்தமையுந், தென்னாட் டிலிருந்த திருவள்ளுவர், சுந்தரமூர்த்திகள் பெரியபுராணத்தில் ஓதப்பட்ட நாயன்மார்களில் திருநீலகண்ட யாழ்ப்பாணர், சிறுத்தொண்டர், நமிநந்தி யடிகள் முதலா யினார் பலருந் தத்தம் மனவிைமாருடன் ஒருங்கிருந்தே தமது வொழுக்கத்தை நடாத்தினமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று. பிற சமயத்தாரிலுந், தனித் துறவுபூண்ட கத்தோலிக் குருமார் ஐம்புல அவா அடங்கப்பெறாமையால் மறைவில் மாதர்பலரை மருவி அவர்பாலுண்டான கருக்களைச் சிதைத்தும் மகவுகளைக் கான்றும் இழைத்த கொடுந் தீவினைகளைக் கண்டு உளம் நடுங்கிய லூதர் என்னும் முனிவர் அக்குருமார் குழாத்தி னின்றும் பிரிந்து போய்த், தாம் ஒரு மாதரை மணந்துகொண்டு தவத்தில் அமர்ந்ததுடன், தங் கொள்கை யைத் தழீஇய குருமார் அனைவரும் மணஞ் செய்துகொண்டே சமய வொழுக்கத்தை நடத்துதல் வேண்டுமெனவுங் கற்பித்துப் புரோடஸ்டாண் கிறித்துவ மதத்தை யுண்டாக்கினார். துலுக்கமதத் தலைவரான மகம துமுனிவருந் தாம் மாதர் பலரை மணந்து கொண்டு தவவொழுக்கத்தை மேற் கொண்டதுடன் தாம் வகுத்த மகமது மதத்தின் குருமாருந் தமக்கியைந்த மனைவியரொடு கூடியிருந்தே ஆண்டவன் றிருவடித் தொண்டு புரிதல் வேண்டு மெனவுங் கற்பித்தார். நஞ் செந்தமிழ்த் தொல்லாசிரியரும் அங்ஙனமே கற்பித் திருத்தலால், தனித்துறவிற் புகுந்தவர். அதில் உறுதியாய் நிற்றல் தம்மால் இயலாதெனக் கண்டால் மீண்டும் மணஞ் செய்துகொண்டு தவஞ் செய்தலையே மேற்கொளற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/343&oldid=1593078" இலிருந்து மீள்விக்கப்பட்டது