உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

319

பாலார். ஏனென்றால், இறைவன் வகுத்த உலகியலொழுக்கத் திற்கு மாறாய் நடத்தல் எத்தகைய ஆற்றலுடையார்க்கும் யலாததேயாம் ஆகலின் என்பது. இனிக்,

66

என்று

கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும்

(குறள் 106)

பணித்தமையால்,

தெய்வத் திருவள்ளுவர் துறவொழுக்கத்தை மேற்கொண்டார் எவரும் எவரையும் இரந்து உணவும் உடையும் பொருளும் பிறவும் பெறுதல் சிறிதும் ஆகாது. அற்றேல், “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்” என மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்தபடி தவவொழுக்கத்தை நடத்துதற்கும் பொருள் வேண்டுமாகலின் அதனைப் பெறுமாறு யாங்ஙனமெனின்; மாணாக்கர்க்கு நூல் கற்பித்தலாலும், நூல் எழுதுதலாலும், நூல் வெளியிடுதலாலும், அவைகளிற் சொற்பொழிவுகள் நிகழ்த்துதலாலும், நோய் தீர்த்தலாலும், இறைவனை நோக்கித் தமக்கு வேண்டுவன வெல்லாம் அகங் குழைந்து வேண்டு தலாலுந் தமக்கு இன்றியமையாது வேண்டுவனவெல்லாங் குறைவறப் பெற்றுத் தமது தவமுயற்சியை இனிது நடத்தலாம் என்க. ஓம் சிவம்.

பல்லவபுரம் பொதுநிலைக்கழக ஆசிரியர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் இயற்றிப் போந்த 'தமிழர் மதம்' இரண்டாம் பாகம் முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/344&oldid=1593079" இலிருந்து மீள்விக்கப்பட்டது