உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

45

இஞ்ஞான்று வழங்கும் மொழிகளிலும், எல்லாந் தமிழ் மொழிக்கேயுரிய குறியீடுகள் புகுந்திருத்தல் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட் டிருக்கின்றது.

66

993

"ஆகவே, இந்தியர் ஆரியர்கள் வருதற்கு முன்னமே, திராவிடமொழிகளைப் பேசுவாரே தென்னிந்திய வடஇந்திய நாடுகளில் முதன்மையாக நிறைந்திருந்தனர் என்று கருதுதற்குச் சிறந்த சான்றுகள் இருக்கின்றன. என்று ஆராய்ச்சிவல்ல ஆங்கில ஆசிரியர்கள் நடுநின்று கண்டு கூறும் மெய்யுரை கொண்டு, ஆரியர் இவ்விந்திய நாட்டின் வடமேற்கே புகுந்து குடியேறுதற்கு முன்னமே இவ்விந்திய நாடு முற்றும் பரவியிருந்தவர்கள் தமிழ் மக்களும் அவர்க்கு இனமான ஏனைத் திராவிட மக்களுமே ஆவரென்பதும், அவர்கள் அஞ்ஞான்று பேசிய மொழி தமிழுந் தமிழுக்கு இனமான ஏனைத் திராவிட மொழிகளுமே ஆகுமென்பதுந் தெற்றென விளங்கா நிற்கின்றன.

4

இனிப், பஞ்சாபிலுள்ள ‘அரப்பா மொகஞ்சதரோ’ என்னும் இடங்களில் அழிந்துபட்ட நகர்களை அகழ்ந்து, அவற்றினின்றும் எடுத்த கல்லுருக்கள், பொன், வெள்ளி செம்புருக்கள், கட்டிடங்கள் முதலானவைகளைக் கருத்தாக ஆராய்ந்து பார்த்த 'ஸர் ஜான் மார்ஷல் என்னுந் துரை மகனார், இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னமே, அஃதாவது ஆரியர்கள் இவ்விந்திய நாட்டிற்குட் குடிபுகு முன்னமே, நாகரிகத்தில் மிகச் சிறந்தாராய் விளங்கிய தமிழ்மக்களே அந்நகரங்களில் வாழ்ந்தவர்கள் என்னும் வரலாற்றினை எடுத்துக் காட்டி யிருக்கின்றனர். அவையும் பிறவும் யாம் ஆங்கிலத்திற் சைவசித்தாந்த வரலாற்றினை விரித்தெழுதிய நூலில் தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டியிருக்கின்றேம். அவையெல்லாம் இங்கே எடுத்துச் சொல்வதற்கே நேரமில்லை.

எனவே, ஆரியர் வருதற்கு முன்னமே அஃதாவது ஐயாயிர ண்டுகளுக்கு மேலாகவே, இவ்விந்திய நாடெங்கணும் பெருந்தொகையினராய்ப் பரவியிருந்தவர் நாகரிகத்திற் சிறந்த தமிழரும் அவரோடு இனப்பட்ட ஏனைத் திராவிடருமே யாவரென்பதும், அவர் வழங்கிய மொழி தமிழுந் தமிழோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/70&oldid=1592791" இலிருந்து மீள்விக்கப்பட்டது