உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மறைமலையம் - 31

தலையின் அமைப்பு, மூக்கின் அமைப்பு முதலியனவாகும். இவ்வடை யாளங்களிற் பெரும்பாலுங் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைக் கொண்டும், அவ்வாற்றால் வெவ்வேறு குழுவினராகத் துணியப்பட்ட மக்கட் பகுப்பினர் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுத் தமக்குள்ளே வழங்கிவந்த மொழிகளின் அமைப்பைக் கொண்டும் அவ்வாசிரியர்கள் நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்ததில், தமிழர்களும் அவர்களோடு இனமான திராவிட மக்களும் பெரும்பாலுங் குள்ளமான வடிவின ரென்றும்; கரிய நிறத்தினரென்றும் தழைக்க கூந்தலும் அதில் ஓரோவொருகாற் சுருண்ட மயிரும் வாய்ந்தவ ரென்றும் கரிய விழியினரென்றும், நீண்ட மண்டை யோட்டினரென்றும், ஒரோவொருகால் அடியிற் குழிந்த அகன்ற மூக்கினரென்றும், என்றாலும் அதனால் தட்டையாகக் காணப்படாத முகத்தினரென்றுந் திட்டமாய் அறியலாயினர். இங்ஙனம் அறியப்பட்ட உறுப்படை யாளங்கள் உடைய தமிழரும் அவர் இனத்தவருமே இப்போது இலங்கை முதல் இமயம் வரையிற் பரவியிருக்கும் மக்கட் கூட்டத்தாரிற் பெரும்பகுதி யினராய்க் காணப் படுகின்றனரென 'ரிசிலி என்னும் ஆசிரியர் முடித்துச் சொல்லியிருக்கின்றனர். அவரைப் பின்பற்றி ராப்சன்2 என்னும் ஆசிரியரும் பின்வருமாறு வரைகின்றனர் :

66

இந்திய மக்களின் பண்டையத் தொகுதியில் முதன்மை யாய் இருந்தவர்கள் திராவிட வகுப்பினரே யாவர்; அவர், வழிநாட்களில் வந்து குடியேறிய ஆரியர், சித்தியர், மங்கோலியர் முதலான மற்றைக் குழுவினருடன் கலப்புற்று மிகவும் வேறுபாடுற்றனர்.

66

"இன்னும், ஆரியர்கள் வடமேற்கே யிருந்து வந்து குடியேறுகின்றுழித் தம்முடன் கொணர்ந்த ஐரோப்பிய ஆ ரியமொழிகளை த்தேயத்தில் நுழைத்த நுழைத்த ஞான்று, வடவிந்தியாவின் மேற்கேயுள்ள நாடுகளில் மெய்யாகவே வழங்கிவந்தவை திராவிட மொழிகளே யென்பதிற் சிறிதும் ஐயமில்லை. வேதமொழியிலும், அதற்குப் பிற்பட்ட சமஸ்கிருத மொழியிலும், பிராகிருத மொழிகளிலும், இன்னும் முற்பட்ட குடிமக்கள் மொழிகளிலும், அவற்றி னின்று தோன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/69&oldid=1592790" இலிருந்து மீள்விக்கப்பட்டது