உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

2. ஆரியர் இன்னாரென்பது

அங்ஙனம் பண்டைநாளிலிருந்த தமிழ்மக்கள் இன்னா ரென்பது துணியப்பட்டாற்போல, வந்தேறுங் குடிகளான ஆரியர் இன்னாரென்பது துணியப் பட்டிருக்கிறதோ வெனின்; அதுவும் ஒருவாறு துணியப் பட்டே இருக்கின்றது. இந்திய ஆரியர் என்பார் பெரும்பாலும் நீண்டுயர்ந்த யாக்கையின ரென்றும், வெள்ளை நிறத்தினரென்றுங், கரிய அல்லது நீல விழியினரென்றும், முகத்தின்மேல் மிகுந்த மயிரின ரென்றும், நீண்டமண்டை யினரென்றும், ஒடுங்கி யுயர்ந்திருந்தாலும் தனிப்பட நீளாத மூக்கினரென்றும் மேனாட்டாசிரியர்கள் ஆராய்ந்தறிந்திருக்கின்றனர். இவ்வாரியமாந்தர், காசுமீரத்திலும் பஞ்சாபில் சிந்துநதி நெடுக அம்பாலா வரையிலுள்ள இ L டங்களிலும் இராசபுதனத்திலுமே காணப்படுகின்றன ரென்றும், அவர் வழங்கிய ஆரியமொழி, பாரசிகம், இலத்தீன், கிரேக்கம் முதலான மேல்நாட்டு மொழிகளோடு னமுடைய தென்றும் ஆராய்ந்து சொல்லி யிருக்கின்றனர். ஆனாலுந், தனிப்பட்ட ஆரியக்குழுவினர் இவர் தாமென்று உறுதிப்படுத்திச் சொல்லுதற்கு இன்றி யமையாத சான்றுகள் கிடைத்திலாமையின், இப்போதுள்ள இந்திய மக்களில் இவர் தாம் ஆரியரென்று பிரித்துக் காட்டுதல் வில்லை யென்றும் மேனாட்டாசிரியர்களே உண்மையை ஒளியாமற் சொல்லி விட்டனர்.

6

அவ்வாசிரியர்களே

யல

இவ்விந்திய நாட்டுக்குப் புறம்பே குளிர்மிகுந்த மணல் வெளிகளிலும், அவற்றின் இடையிடையே அடர்ந்த புல் நிலங்களிலும் ஆடுமாடு மேய்த்துக் கொண்டு மிடிப்பட்ட வாழ்க்கையினராய் அலைந்து திரிந்த ஆரியர் பெருந்தொகை யினராய் இருத்தல் இயலாது; ஆகவே, அவரிலிருந்து பிரிந்து இவ்விந்திய நாட்டின் வடக்கே போந்து குடியேறிய ஆரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/72&oldid=1592794" இலிருந்து மீள்விக்கப்பட்டது