உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

5. மநு ஒரு திராவிட மன்னன்

மநு என்பவன் நாகரிக ஒழுக்கத்திற் சிறந்த ஒரு திராவிட மன்னன் என்றும், இம்மாநிலத்தைக் கடல்நீர் கவரத் துவங்கிய காலத்தில் அம்மன்னன் மலையநாட்டில் ஓடிய கிருதமாலை ஆற்றங்கரையிற் றவஞ்செய்து கொண்டிருக்க ஒரு மீன்வடிவிற் றோன்றிய திருமால் அவனை அவ் வெள்ளத்திற்குத் தப்புவித்தன ரென்றும், அவ்வெள்ளம் வடிந்த பின் அம்மன்னன் பல முகமாய்ச் சிதர்ந்தோடிப் போன குடிமக்களையெல்லாம் ஒருங்கு சேர்த்து, அவரை மீண்டும் நாடுநகரங்களில் நிலை நிறுத்தி அவர் ஒழுக வேண்டிய வாழ்க்கை முறைகளைக் கற்பித்தனனென்றும், அங்ஙனம் அவன் கற்பித்த அறநூலே ‘மநு மிருதி’எனப் பெயர் பெறலா யிற்றென்றும் ‘பாகவதம்’ 'மற்ச புராணம்', 'அக்கினி புராணம்' முதலான நூல்கள் நுவலா நிற்கின்றன.

1

இவ்வரலாற்றினை நுனித்தறியுங்காற், காசுமீரத்திற் றங்கிய ஆரியர் நாகரிகவொழுக்கஞ் சிறிதும் இலராகவே . அவரைத் திருத்துதல் ஒருவாற்றானும் இயலாமை கண்டு அவரை அறவே விட்டொழித்து, இன்னுங் கிழக்கே கங்கையாறு பாயும் நடுநாடுவரையிற் போந்து வழிநெடுக நாகரிக வாழ்க்கையில் உயிர் வாழ்ந்த தமிழருடன் கலந்து, தமிழருடைய பழக்க வழக்கங்களிற் பழகிக், கொலை புலை கட்குடி சூது வெறியாட்டுகளைப் பையப் பைய விட்டுச் சீர் திருந்தி வந்த திராவிட ஆரியருடைய வாழ்க்கை முறைகளையே பின்னுஞ் சீர்திருத்தி அவர்க்கு அறிவு தெருட்டும் பொருட்டே மநுவென்னுந் தமிழ் மன்னன் மத்திய தேசத்தில் அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/78&oldid=1592801" இலிருந்து மீள்விக்கப்பட்டது