உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

  • மறைமலையம் - 31

மாடு முதலான விலங்குகளை ஏராளமாய்க் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்று வந்ததும் அல்லாமல், ஆறறிவுவாய்ந்த மக்களையுங் காலை செய்து அவர்களின் ஊனையும் விழுங்கிவந்தமையும், அது மட்டுமோ, சோமப்பூண்டை நசுக்கிப் பிழிந்த கள்ளையுங் குடங்குடமாய்க் குடித்து, வரைதுறையின்றி மகளிரைப் புணர்ந்துஞ் சூதாடியுங் களியாட்டிற் காலங்கழித்து வந்தமையுங் கண்டு, நாகரிக ஒழுக்கஞ் சிறிதும் இல்லா அத்தனி ஆரியரையும் அவர் உறைந்த காசுமீர தேயத்தையும் மநு ஒப்புக்கொண்டு கூற உள்ளம் ஒருப்படாமலே விட்டு விட்டனர் டுவி என்பது புலனாகா நிற்கின்றது. வடமேற்கிலிருந்து வந்து இவ்விந்திய நாட்டுள் நுழைந்த ஆரியர் கொலை புலை கட்குடி வெறியாட்டு முதலிய இழிதொழிற்களில் மிக்கவராய் இருந்தமை, அவர் அஞ்ஞான்று இந்திரன் வருணன் முதலான தந்தெய்வங் கண்மேற் பாடிய இருக்குவேதப் பாட்டுகளால் நன்கறியக் கிடக்கின்றது. இவற்றின் விரிவெல்லாம் எமது 'மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும்' என்னும் நூலிற் றக்க சான்று களுடன் காட்டப் பட்டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/77&oldid=1592800" இலிருந்து மீள்விக்கப்பட்டது