உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

4. திராவிட ஆரியர்

ஆதலால், உடம்பின் நிறத்தைவிட உருவ வமைப்பு களிற் புலப்படக் காணும் வேறுபாடு கொண்டு மக்களின் பல வேறு பிரிவுகளைத் தேர்ந்தறிதலே பொருத்தமாகுமென்று தெரிதல்

ம்

வேண்டும்.காப்பிரிகளையும் அராபியரையும் மங்கோலியரையுஞ் சீனர்களையுங் கண்டவுடனேயே அவர் தம்மில் வேறுபட்ட அமைப்புடையராதலைத் தெற்றென அறியாதார் யார்? அதுபோல இப்போதுள்ள நம் இந்து மக்களில் இவர் ஆரியர், இவர் தமிழர் என்று புலப்படப் பிரித்துக் காண்டல் சிறிதேனும் இயலுமோ? இயலாதே. என்றாலும், சித்தியருந் திராவிடருந் கலந்த கலப்பிற் றோன்றிய மக்களையும் மங்கோலியரு திராவிடருங் கலந்த கலப்பிற்றோன்றிய மக்களையும் பிரித்துக் காண்டல் இஞ்ஞான்று எளிதாய் இருத்தல் போலவே, திராவிட டரும் ஆரியருங் கலந்த கலப்பிற் பிறந்த மக்களையும் பிரித்தறிதல் இயல்வதாகவே யிருக்கின்றது. இங்ஙனமாக ஆரிய திராவிடக் கலவையிற் றோன்றிய மக்களையே ஆரியராகக் கருதி, அவர் உறையும் இடம்; சரசுவதி யாறு மணல் வெளியிற் சுவறி மறைந்துபோன இடமான ‘விநசநா’ என்னும் ஊரிலிருந்து அலகபாத்து' அல்லது பிரயாகை வரையிலுள்ள ‘மத்ய தேசமே' ஆகுமென்று மனுமிருதி (2,21) கூறுவதாயிற்று.

இங்ஙனம் ஆரிய திராவிடக் கலவையிற் பிறந்த மக்களைத் தவிர, வேறு தனிப்பட்ட ஆரியர் என்பார் மநு குறித்த மத்திய தேசத்தில் இல்லையாகவும், அத்தேசத்தி லிருந்த திராவி ஆரியரையே ஆரிய மக்களாகவும், அவர் உறைந்த இடத்தையே மத்திய தேசமாகவுங் கொண்டு கூறிய மநு, தனிப்பட்ட ஆரிய மாந்தர் உறைந்த காசுமீரத்தையும் அதன்கண் உறைந்த ஆரியரையும் ஒப்புக்கொண்டு கூறாமையினை உற்றுநோக்குங் கால், அவர் காலத்தில் அங்கிருந்த ஆரியர், குதிரை எருமை ஆடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/76&oldid=1592798" இலிருந்து மீள்விக்கப்பட்டது