உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் - 31

வேனலிலும் நின்று பயிர்த்தொழிலைச் செய்து வருதலாற் கரிய நிறத்தினராய் இருக்கின்றனரே யல்லாமல், உடம்பின் அமைப்பு வகையில் அவர்கட்கும் மற்றை வகுப்பினரான தமிழர்கட்கும் ஏதொரு வேறுபாடுங் காணப்படவில்லை. அங்ஙனமே, தமிழர் மலையாளர் தெலுங்கர் கன்னடர் தோடர் முதலான திராவிட மாந்தரிலும் நிறவேறுபாடு சிறிது சிறிதே காணப் படினும், உருவ வமைப்பில் வேறுபாடு சிறிதுங் காணப்படவில்லை. பறையரிலேயே உழுதொழிலின்றி, வேறு தொழில்களை நிழலிலிருந்து செய்வாரும், கல்விகற்று உயர்ந்த நிலைகளில் இருப்பாருஞ் சிவந்த நிறத்தினராய் அழகிய தோற்றம் வாய்ந்து உயர்வகுப்பினரோடு ஒத்த வடிவினராயே

ஏனை

திகழாநிற்கின்றனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/75&oldid=1592797" இலிருந்து மீள்விக்கப்பட்டது