உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

3. தமிழரின் உருவ அமைப்பு

.

L

மேலும், தமிழ்மக்கள் எல்லாருங் கரிய நிறத்தினராயும், ஆரியரெல்லோரும் ஐரோப்பியரைப் போல் வெளிய நிறத்தினராயும் எங்கும் நிறத்தால் வேறுபட்டேயிருந்தன ராயின், அவரை அதுகொண்டு வேறு பிரித்துக் காண்டல் இயலும். மற்றுக், கால்டுவெல் ஆசிரியர் காட்டியபடி, தமிழ் மக்களிலேயே கறுப்பில் வெளிறிய நிறம் உடைய வரும், சிவந்தநிறம் வாய்ந்தவரும், பொன்னிறம் மிகுந்த வரும், பழுப்புநிறம் பொருந்தியவருமாகப் பலவேறு நிறம் உடையவர் இடையிடையே காணப்படுகின்றனர். சென்னையைத் தலைநகராய்க் கொண்ட தொண்டை நாட்டிலும் மதுரையைத் தலைநகராய்க் கொண்ட பாண்டி நாட்டிலும் உள்ள தமிழர்கள் பொதுவாய்க் கரிய நிறத்தினராகவே காணப்படுகின்றனர். ஆனாலும், பாண்டிநாட்டவர் உடம்பின் உயரத்தில்,தொண்டை நாட்டவரை விட நீண்டு காணப்படுகின்றனர். நடுப்பட்ட சோழ நாட்டிலுள்ளவர்களோ மிக நீண்டும் மிகக் குறுகியும் இல்லாத நடுப்பட்ட உயரமுள்ள உடம்பினராய், வெளிறிய கறுப்பு நிறமும் பழுப்பு நிறமுஞ் சிவந்த நிறமும் பொன்னி றமும் வாய்ந்தவர்களாய் இருக்கின்றனர். மலையாள நாட்டிற் புலையர்களைத் தவிர மற்றை வகுப்பினர் அனைவருங் கரிய நிறத்தினர் அல்லர். அவர்களிற் சிவந்த நிறத்தினரும் பழுப்பு நிறத்தினரும் பொன்னிறத்தினரும் மிகுதியாய்க் காணப் படுகின்றனர்.

இங்ஙனமே தெலுங்கர் கன்னடர் தோடர் முதலான மற்றைத் திராவிட மாந்தர்களும் பலவேறு நிறத்தினராய் இருக்கின்றனரே யல்லாமல், அவரெல்லாரும் முற்றுங் கறுப்பு நிறமே வாய்ந்தவரல்லர். தமிழ்மக்களிற் பண்டை வகுப்பினராகிய பறையர் பள்ளர் முதலியோர் பகல்முழுதும் வெயிலிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/74&oldid=1592796" இலிருந்து மீள்விக்கப்பட்டது