உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

6. திராவிட ஆரிய வகுப்பு

மய

ஆகவே.காசுமீரதேயத்தின்கண் வந்து குடியேறிய ஒரு சிறு தாகுதியினரான ஆரியரைத் தவிர, வேறு தனிப்பட்ட ஆர் ஆரியர் இவ்விந்தியதேயத்தில் இலரென்பதும், காசுமீரம் இராசபுதனம் முதலான சில இடங்களிற்றங்கிய ஆரியரைத் தவிர இட மலைக்கும் விந்தியமலைக்கும் இடையேயுள்ள நாட்டிற் குடிபுகுந்த ஆரியர் அனைவரும், அவர்க்கு முன்னமே அங் கெல்லாம் நாகரிகத்திற் சிறந்தாராய் வயங்கிய திராவிட மக்களிற் கலந்து திராவிட ஆரியராயினரென்பதும், இங்ஙனந் திராவிட ஆரியக் கலவையிற்றோன்றிய மக்கள் ஆரியருடைய தீய பழக்க வழக்கங்களைப் பெரும்பாலுங் கைவிட்டுத் தமிழருடைய ய ய அரு ளொழுக்க முறைகளைச் சிறிது சிறிதாக் கைக்கொண்டு ஒழுகத் துவங்கின்மையின், தவவொழுக்கத்தின் மேம்பட்ட தமிழ்மன்னனாகிய மநுவென் பான், அவரைப் பார்ப்பனர், அரசர், வணிகர், தொழிலாளர் என நான்கு வகுப்பினராகப் பிரித்து, அவரவர்க்குரிய ஒழுக லாறுகளை முறை செய்து நூல் இயற்றலாயினன் என்பதும் மனத்திற் பதித்தல் வேண்டும். இந்நால்வகைச் சாதி, வகுப்பு, திராவிட ஆரியர்க்காக வகுக்கப்பட்டதே யன்றி, அது தமிழ்மக்கட்கும் உரியதாக வகுக்கப்பட்டது அன்று. ஏனென்றால், ஆரியர் இங்கு வருதற்கு முன்னமே, அந்தணரும், அரசரும், வேளாளரும் பதினெண்டொழிலாளரும் பண்டைத் தமிழ் மக்களுள் இருந்தமை, இப்போதிருப்ப வற்றுள் மிகப் பழைய நூலாகிய தொல்காப்பியத்தின் புறத்திணையியலிற் போந்த,

“அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/80&oldid=1592803" இலிருந்து மீள்விக்கப்பட்டது