உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன்

கார்மேகம் பொய்த்தாலும் கல்வியெலாம் பொய்த்தாலும்

கடவுள்நிலை பொய்ப்ப தில்லை

கற்கண்டு கசந்தாலும் கனிச்சாறு கசந்தாலும்

கலைத்தமிழ் கசப்ப தில்லை.

தார்மாலை சூட்டிடினும் தேர்வாகை காட்டிடினும்

தனித்தமிழ் பிறழ்வ தில்லை,

தக்கோர்கள் குறைந்தாலும் மிக்கோர்கள் மறைந்தாலும்

தைரியம் குறைவ தில்லை

ஊர்திரண்டு நின்றாலும் பேர்வறண்டு சென்றாலும்

உண்மையை மறைப்ப தில்லை

உலகமே எதிர்த்தாலும் கலகமே அழைத்தாலும் ஓய்வினைக் கொள்வ தில்லை.

சீர்நிறைந்த தனித்தமிழைப் பார்நிறைக்க வந்தவனே! சிறுதேர் உருட்டி அருளே!

தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே! 10) சிறுதேர் உருட்டி அருளே!

போராட்டத்திற்கிடையில்

அடிகள்

87

தனித்தமிழ்க்

கொள்கையில் வெற்றி கண்டார். ஆனால் அவர் பல மொழி

பயின்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/112&oldid=1595001" இலிருந்து மீள்விக்கப்பட்டது