உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

-

  • மறைமலையம் -34 *

கல்லாத மூடர்க்குப் பொல்லாத பிறவியது

கடல்அலையாய்ப் பெருகி நிற்கும்

கைசலிக்க வேதாவும் மெய்சமைக்க வையாமல்

கல்வியினைக் கற்க வேண்டும்.

பொல்லாத உலகநூற் கல்வியது வையத்தில்

போற்றுமே உடலை மட்டும்.

புகழ்மிக்க அறிவுநூற் கல்வியினால் நிலையான

போற்றுதல் உயிருக் குண்டு.

வெல்லாத பொருளில்லை; கொள்ளாத புகழில்லை

வெற்றியும் குறைவதில்லை.

விலங்காக இல்லாமல் அறிவுநூல் கற்றோர்கள் விற்பன்னர் ஆகக் கல்வி

செல்லாத பிறவியிலை எனஉண்மை செப்பியவா! சிறுதேர் உருட்டி அருளே!

தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே!

9) சிறுதேர் உருட்டி அருளே!

வேதா = பிரமன்.

“உலகநூற் கல்வி உடம்பை வளர்க்கும். அறிவுநூற் கல்வி உயிரை வளர்க்கும்" என மேற்கண்ட கருத்துக்களை “அறிவுரைக் காத்தில்” அடிகள் “அறிவுநூற் கல்வி” என்னும் கட்டுரையில் வரைந்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/111&oldid=1595000" இலிருந்து மீள்விக்கப்பட்டது