உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

ஆராய்ச்சி முன்னுரை

புலவர். தெ. முருகசாமி, எம்.ஏ.,பி.ஓ.எல்.,

(முதல்வர், இராமசாமி தமிழ்க்கல்லூரி, காரைக்குடி)

காலத்திற் கேற்பக் கவிஞர்கள் தோன்றுவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அதன்படி காலத்திற்குக் காலம் மொழியில் கலைவளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியும் தொடர்ந்து நடை பெறுவது வரலாறு காட்டும் உண்மையாகும். தொல் காப்பியத்தில் சுட்டப்பெறும் வனப்பு எட்டனுள் ஒன்றாகிய விருந்து புதிய புதிய இலக்கியத் தோற்றத்திற்கு வழி கோலியது. இதனால் சங்க காலத்தில் இல்லாத எத்தனையோ இலக்கியங்கள் பிற்காலத்தில் தோன்றலாயின. காலத்திற்குக் காலம் இலக்கியங்கள் மாறி மாறியமைந்தன போலவே தமிழ்க் கவிதைகளின் வடிவமும் மாறி மாறியமைந்தன. அந்த வகையில் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிங்கள் சிற்றிலக்கியங்கள் எனப்பட்

ன.

பொதுவாகச் சிற்றிலக்கியங்களைத் தொண்ணூற்றாறு வகையாகக் கூறுவர். அவைகளுள் பிள்ளைத் தமிழ் என்பதும் ஒன்று. 'குழவி மருங்கினும் கிழவதாகும்' என்ற தொல்காப்பிய நூற்பாவை ஆதாரமாகக் கொண்டு இந்நூல் அமைந்ததாகக் கொள்வர். ஆசிரிய விருத்தத்தால் இனிய சந்தமுடனும் பொருள் நுட்பத்தோடு கூடிய சொல்லாட்சியுடனும் கற்பனை வளத் துடனும் பாடப்பெறும் பிள்ளைத் தமிழ் நூல் கற்பாரைக் கொள்ளை கொள்ளும் சிறந்த இலக்கியமாகத் திகழ்கிறது.

இளமைப்பருவத்தில் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் கண்டு மகிழத்தக்கனவாகவே இருக்கும். இம்மகிழ்ச்சி உந்தலின் வெளிப்பாடு தாயின் பாடல்களாக வெளிவருகின்றன. இப்படியாகத் தாய் தான் துய்த்துப் பாடிய பாடல்களே பிற்காலத்தில் புலவர்களால் பாடப் பெற்ற பிள்ளைத் தமிழ்ப் பாடல்களாக வெளிவரலாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/116&oldid=1595005" இலிருந்து மீள்விக்கப்பட்டது