உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் -34 *

பிள்ளைச் செல்வத்தின் வழிப் பிறப்பது அன்பு.இவ்வன்பே பின் உலகில் பிறரிடமும் பரவிச் சென்று 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உயரிய பண்பை வளர்க்கிறது. எனவே பிள்ளைப் பாசத்தின் அடிப்படையில் எழுந்தனவே பிள்ளைத் தமிழ் நூல்கள் என்றும் கூறலாம்.

கவிஞர்கள் தாங்கள் போற்ற விரும்பும் தெய்வத்தையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதிக் கொண்டு காப்பு முதலிய பத்துப் பருவங்களாக அமைத்துப் பாராட்டுவர். அங்ஙனம் பாராட்டுகையில் ஆண் பெண் இருபாலார்க்கும் தனித்தனியே பிள்ளைத்தமிழ் செய்வது மரபாகும். இந்த வகையில் இலக்கிய இன்பம் பூத்துக் குலுங்கும் பிள்ளைத் தமிழ் நூல்கள் பல தோன்றின. இப்பிள்ளைத்தமிழ் வரிசையில் கவிஞர் திரு. சி.அன்பானந்தம் எழுதிய “மறைமலையடிள் பிள்ளைத் தமிழும் ஒன்று.

நூலெழுந்த வரலாறு: காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி நிறுவனர் திரு. இராம.பெரி.பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் தமிழ் மொழியிடத்தும் தமிழ்ச் சான்றோர்களிடத்தும் அளப்பரிய பற்றுக்கொண்டவர்கள். அப்பற்றின் வெளிப்பாடாக அவர்கள் ஆற்றிவரும் தமிழ்த் தொண்டுகள் பலவற்றுள் மறைமலையடிகள் நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்ற அவர் தம் எண்ணமும் ஒன்றாகும். அதனால் “மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்க்” கவிதைப் போட்டி என்ற ஒன்று உருவானது. அப்போட்டியில் கலந்து கொண்ட பதின்மூன்று கவிஞர்களுள் மலேசிய நாட்டைச் சார்ந்த பினாங்குக் கவிஞர் சி.அன்பானந்தம் எழுதிய இந்நூல் உரூ.இரண்டாயிரம் (உரூ. 2,000) முதற்பரிசு பெற்ற வகையில் வெளிவருகிறது.

நூலமைப்பு: பிள்ளைத் தமிழ்பாடும் மரபிற்கேற்ப இந்நூலும் ஆசிரிய விருத்தத்தால் பாடப்பட்டுள்ளது. பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களே மிகுதியாகப் பாடப்பட்டுள்ளன. இடையிடையே சீர்கள் மிகுந்தும் குறைந்தும் உள்ள பாடல்களும் சந்த விருத்தங்களும் காணப்படுகின்றன. எடுத்துக் கொண்ட தலைப்பிற்கேற்ப மறைமலையடிகளின் வாழ்க்கை வரலாறு கற்பவர் கருத்தைவிட்டு நழுவாதவாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/117&oldid=1595006" இலிருந்து மீள்விக்கப்பட்டது