உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

93

விடாமல் கூறிச் செல்லும் திறன் இந்நூலுக் கமைந்துள்ள தனிச் சிறப்பாகும்.

66

“கையிதழ் நீட்டிய ழைத்திடும் பூக்களும்

கச்சித மாய்த்தலை யாட்டித் தென்றலும் கண்டுலா வந்திடும் காடநற் பாடியில்

நாவணி செய்தமிழ் நாவலர் பாடிட

நன்குசி றந்துதி கழ்வுற வேவரும்

நம்பியைச் சீர்தமிழ் நன்குணர் செல்வனை”

என நூலின் தொடக்கத்தில் மறைமலை அடிகளின் பிறப்பும்,

66

'கார்குழற் சாந்தம்மை கற்புநெறி வாழ்கஅவர்

கருத்துரை துணைவர் வாழ்க

கருவிலே திருவென உருவான மறைமலை காணும்வழி எச்சம் வாழ்க”

1

100

என நூலின் இறுதியில் அடிகள் சாந்தம்மை என்பாரு ன் வாழ்ந்த இறுதி வாழ்வும் சுட்டுவதால் பிறப்பிற்குட்பட்ட வரலாறு முழுவதையும் இடைப்பட்ட பாடல்கள் உணர்த்து கின்றன எனலாம். வாழ்வில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற குறிப்பை இந்நூலின் அமைப்பு உணர்த்துகிறது.

பருவ விளக்கம்: பருவ விளக்கம் பற்றிய கருத்துக்களைப் புலவர்கள் ஒரோவழி சில பருவங்களில் அகச் சான்றாகக் கூறுவது உண்டு. குமரகுருபரர் குழந்தை செங்கீரை ஆடுகின்ற முறையை முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழில் குறிப்பிடுகிறார். இவ்வாறு இந்நூலில்,

“மேவிடக் கையோடு காலூன்றித் தலைதூக்கி மின்னுமொளிக் கண்களாலே

மிரளாது தெளிவோடு நோக்கியழ கூட்டியே மென்னகைப் பூட்டிவளர்த்தே”

14

எனச் செங்கீரைப் பருவத்தை விளக்கும் வரிகள் அப்பருவத்தில் காணப்படுகின்ற.ன

தாலப் பருவத்தில் குழந்தையைத் 'தொட்டிலில் கிடத்தித்

தாலாட்டுப் பாடுவதாகப்

பிள்ளைத்தமிழ் நூல்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/118&oldid=1595007" இலிருந்து மீள்விக்கப்பட்டது