உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மறைமலையம் – 34

34 *

பெரும்பாலும் பாடல் இல்லை. திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழில் ஆசிரியர் அழகிய சொக்கநாதர்,

'திருமணித் தொட்டில் ஏற்றித்

திருக்கண் வளரச் சீராட்டேன்’

என்று வருகைப் பருவத்தில் தாலப் பருவ அமைப்பைக் கூறுகிறார். ஆனால் கவிஞர் அன்பானந்தம் தாலப் பருவத்திலேயே,

‘தொங்கல் பூண்டே நவமணிப்பொன் தொட்டில் தனிலே தாலேலோ'

27

எனப் பருவ விளக்கத்தைத் தந்திருப்பது மிக மிகச் சிறப்பிற் குரியதாக உள்ளது.

நூலாசிரியரைப் பற்றி:- இந்நூலின் ஆசிரியர் கூறும் சி.அன்பானந்தம் அவர்கள் நூற்றொடக்கத்திலுள்ள பிள்ளை

யார் வணக்கப்பாடலில்,

“பேர்கொண்ட பனிமலைப் பெம்மானின் பிள்ளையாய்ப்

பெரும்பேறு பெற்ற வேழம்

பெரிதும் மனத்துளே வைத்துருகும் பிள்ளையைப் பிரியமுடன் வந்துகாக்க'

என்று தம்மை அடக்கமாகக் கூறிக்கொள்கிறார். 'பிள்ளையை’ என்ற அவர் தம் அவையடக்கக் குறிப்பும் பணியுமாம் என்று பெருமை என்பதைக் காட்டுகிறது. மேலும், பிள்ளை

என்றழைக்கும் வேளாளர் குலத்தைச் சார்ந்த குறிப்பையும் உணர்த்துகிறது. மதுரைச் சொக்கேசரின் திருவிளையாடற் புராணக் கதைகளையே நூலின் தொடக்கத்தில் பல இடங்களில் (2,3,4,15) சுட்டுவதால் இவர் தாம் பாண்டிய நாட்டைச் சார்ந்தவர் என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார்.

கவிஞரின் நெசப்பாங்கு: அடிகளிடம் நெருங்கிப் பழகியவரைப் போல அவர் தம் நூல் முழுவதையும் நன்கு கற்றுத் தெளிந்து இந்நூலைச் செய்துள்ளார்.குருவினிடம் சீடன் ஒருவன் காட்டும் உணர்ச்சியைப்போல் ஆசிரியர் அடிகளிடம் காட்டி யுள்ள உணர்வை இந்நூலைக் கற்போர் உணரலாம். தமிழ் மொழிகள் சிறப்பைத் தலைமையாகக் கொண்டு பிள்ளைத் தமிழ் பாடிய குமரகுருபரரைப் போலத் தொட்ட இடமெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/119&oldid=1595008" இலிருந்து மீள்விக்கப்பட்டது