உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

95

கவிஞர் தமிழைப் பாராட்டுகிறார். தமிழைக் கூறுமிடங்களில் எல்லாம் அடை கொடுத்தே கூறுகிறார். சொக்கரின் தீந்தமிழ் (3) கணக்குந் தண்டமிழ் (8) மலரெனுந் தண்டமிழ் (20) நளிரே நிறைந்த தமிழ் (48) வழுதியர் புரந்த தமிழ் (50) இவ்வாறு தமிழை அடைகொடுத்து மகிழும் நெஞ்சினராகப் பாவலர் விளங்குகிறார்.

தமிழ்மொழி ஐந்திணை நெறியளாவிய மொழி. எம்மொழியிலும் இல்லாத அன்பின் ஐந்திணைப் பகுப்பு நம் தமிழில் மட்டுமே காணும் தனிப்பெரும் சிறப்பாகும். இந்நுட்பத்தை உணர்ந்த கவிஞர் சிறுதேர்ப் பருவத்தில் ஐந்திணைகளையும் மறைமலையடிகளுடன் பொருத்திப் பாராட்டியிருப்பது நீள நினைந்து இன்புறத்தக்கதாக உள்ளது. முல்லைக்குத் தானமர் தங்கத்தே ருறைதந்த முடியுடைப் பாரிதனிலும்

முல்லைக்குத் தேனமர் செந்தமிழ் தேருரை முழுதீந்த புகழுமெய்தி

இல்லைக்குச் சான்றெனும் பாலைக்குங் குறிஞ்சியின் இறையருட் தமிழைஈந்தே இயல்பகஞ் சோலையாய் இழையூடு பாவுற

எடுத்தநூல் நெய்தலாக்கி

எல்லைக்குச் சார்புறாக் கருணைமரு தம்வீச

இந்திரன் வருணனுடனே

இளையவன் துர்க்கைதிரு மாலுமவர் தேரேறி

இனிதே விரைந்தருள

தில்லைக்குள் ளுள்ளவனின் உள்ளத்தேர் நிற்பவன்

சிறுதே ருருட்டியருளே

திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன்

சிறுதே ருருட்டியருளே.

98

தானமர்தற்குரிய தேரை முல்லைக்குத் தந்த பாரி வள்ளலைவிட அடிகள் முல்லைப்பாட்டு என்னும் நூலுக்குத் தேர்ந்த உரை தந்தனர். நிலம் பகுக்கப்படாத பாலை என்னும் பெயரையுடைய பட்டினப்பாலை என்னும் நூலுக்கும் சிறந்த உரையீந்தனர். குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/120&oldid=1595009" இலிருந்து மீள்விக்கப்பட்டது