உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

96

மறைமலையம் - 34 *

மும்மணிக்கோவை என்னும் நூலைச் செய்தனர். இவ்வாறாக, 'முல்லைப்பாட்டு, பட்டினப் பாலை என்னும் நூல்களுக்குப் பசுஞ்சோலை போன்ற தண்ணிய அழகிய உரையும் (இழை) முருகர் மும்மணிக்கோவை என்ற நூலும் (பா) தமிழில் நெய்து (நெய்தலாக்கி) இப்படியாக அடிகளின் எல்லையிட முடியாத தமிழ் மீது கொண்ட கருணையாகிய மருதம் (காற்று) எங்கும் வீசிடச் செய்வதால் இவ் ஐவகை நிலங்களுக்குரிய செயல்களை ஒருவரே செய்யும் நிலையை எண்ணி மருதத்திற்குரிய இந்திரன், நெய்தலுக்குரிய வருணன், குறிஞ்சிக்குரிய முருகன், (இளையவன்) பாலைக்குரிய கொற்றவை (துர்க்கை) முல்லைக்குரிய திருமால் ஆகிய ஐம்பெருங் கடவுளர்களும் மறைமலையாகிய குழந்தைக்கு அருள்செய்ய வேண்டித் தேரேறி வரச் சிறுதேர் உருட்டுக என்கிறார் கவிஞர். அடிகள் உரை எழுதியும் நூல் செய்தும் தமிழ்த் தொண்டாற்றிய சிறப்பை நெசவுத்தொழிலோடு ஐந்திணையைப் பொருத்திப் பார்க்கும் பாவலரின் தமிழ் நெ சப் பாங்கு பாராட்டுதற்குரியது.

சொல்லாட்சி: இந்நூலுள் பழமையும் புதுமையும் எளிமையும் கலந்த சொற்கள் கையாளப்பட்டுள்ளன. (9) மோய் - தாய்;(21) தண்ணம் - மழு; (45) முள்கிட - தழுவிட - (71) சிகலில் - கேடில்லாத; (77) சிணக்கம் - துன்பம்; என்பன அரிய இலக்கிய வழக்குச் சொற்கள். கச்சிதமாய் (1) கண்ணியம் (4) சளையாது (36) தலைமை வகித்து (89) என்பன எளிய வழக்குச் சொற்கள். பாவலரின் புது ஆட்சியாக நறுமணம் என்ற பொருளில் கமழ்ச்சி (56) என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. மேலும் கலப்புத் தமிழ் என்பதைச் சரளத் தமிழ் (22) என்றழைக்கிறார். வாழ்த்துதல்,புதிய கொள்கை என்ற பொருள்களில் வரும் முகம்மதியரின் 'தீன்' (15) என்ற சொல்லாட்சி சிறப்பாக உள்ளது. ஆங்கிலேயரை வெண்மக்கள் (7,46) என்றும் அவர்களது நூலை வெள்ளை நூல் (7) என்றும் சுட்டும் சொற்கள் நகைச்சுவை தருவனவாக உள்ளன. சிலேடை வகையில் (4) தும்பி (யானைமுகக் கடவுள், வண்டின் இனம் (5) அருள்தாதா (அருள் தந்தை, அருளைத் தாதா), (61) மறைமலையார் (வேதாசலநாதராகிய இறைவன், அடிகள் பெயர்) எனப் பல சொற்கள் கையாளப்பட்டுள்ளன.

ஓசையின்பம்: பாடல்கள் இனிமையும் ஓசை நயமும் மிக்கனவாக உள்ளன. குமரகுருபரர் எழுதிய, 'உலகு குளிர எமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/121&oldid=1595010" இலிருந்து மீள்விக்கப்பட்டது