உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

97

மதியின் ஒழுகும் அமுத கிரணமே' எனும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்ப் பாடலைத் தமிழ்க் கவிஞர்கள் பொருளாலும் சந்த இன்பத்தாலும் சிறந்த பாடலாகக் கூறுவர். அவ்வாறே செந்தமிழின் தீஞ்சுவை செறிந்த சொற்களால் இந்நூலாசிரியர்

66

.

'அரசு மதியு மொளியும் புனலு முடைய எளிய சிவனையே

அறிவு முணர்வு மிணைந்த பொழுதி லகத்தி லொடுக்கி”யிருந்தியே” 60 என்ற வருகைப் பருவப் பாடலை நாவினிக்கப் பாடும் சந்த இன்பம் உடையதாகப் பாடியுள்ளார். இப்பருவத்தின் முடிவுகளில் ஓசையின்பங் கருதி ‘வருகவே நீ வருகவே, வருகவே, முன் வருகவே’ என நீ, முன் எனும் சொற்கள் பெய்தது இந்தநூலில் காணப்படும் புதிய முறையாகும். மேலும்,

‘வேதாசல நாதாவருள் தாதாவெனப் போற்றில்

வேலாயுத மேதானுடை கோலத்துறு கன்றை வேதாகம நூலோர்பணி வேந்தேயெனப் பாடில்

வீணாய்மிடி வாராவகை வாழச்செயுங் குன்றை’

5

என்ற காப்புப் பருவப் பாடல் அழகிய சந்த விருத்தமாக செவிக்கின்பந் தருகிறது.

உவமை: உவமை என்பது கவிதைக்கு அணி செய்யும் செய்யுட் பகுதி. அடிகளின் வாழ்வு காலத்தோடு ஒட்டிய தேவையை யுணர்த்தும் காலக் கண்ணாடி என்பதை நன்குணர்ந்த இந்நூலாசிரியர் அதற்கேற்ற உவமைகளைக் கையாளுகிறார்.

'வான்முறை வைத்துமும் மாரியும்

பெய்திட வந்ததை யொத்தவனை’

என்று அடிகள் மழைக்குச் சமமாகப் போற்றப்படுகிறார்.அதிலும் மாதம் மும்மாரியைப் போன்றவராம். நாடு செழிக்க வந்த மும்மாரியைப் போலத் தமிழ்ப்பயிர் செழித்து வாழவேண்டி அடிகள் தோன்றினார் என்பது பொருள். 'பெய்யெனப் பெய்யும் மழை' என்ற வள்ளுவரின் கருத்து ஈண்டு ஒப்புநோக்கற்குரியது. ‘உழுதிடு மொருசெயில் உழவன்றன் பொழுதினை யுணர்வொடு போக்குதல் போல்

ஒளியுமிழ் தமிழெனுங் கழனியிற் பொழுதினை யொருங்குறத் தேக்கியவன்'

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/122&oldid=1595011" இலிருந்து மீள்விக்கப்பட்டது