உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் - 34 *

செவ்வியறிந்து காலத்தை வீணாக்காமல் உழுது பயிர் செய்யும் ஓரேருழவனைப் போல் அடிகள் தமிழ்க் கழனியில் சொல்லோரைக் கொண்டு உழுது, தமிழ்ப்பயிர் வளர்க்க வாழ்நாள் முழுவதையும் வீணாக்காமல் வாழ்ந்தார். 'வாராது வந்த மாமணி' என்ற பாரதியின் தொடர் ஈண்டு ஒப்புநோக்குதற்குரியதாகும்.

அடிகள்

திருவெண்ணீறணிந்துள்ள நெற்றியில் பொட்டணிந்துள்ள காட்சி சொல்லும் பொருளும் போல்

உள்ளதாம்.

“துடியைந் தாங்கு சிவனார்கொள்

துய்ய வெண்மைத் திருநீறும் பொட்டுந் துலங்கப் பொலிவேற்றுப் பொற்பைக் கூட்டும் திருக்காட்சி

பொருள்சே ரினிமைச் சொற்கவியின்

பொருந்தி வாய்த்தாற் போலிருக்க”

28

‘எமக்குத் தொழில் கவிதை' என்பது போலக் கவிஞர்கள் சொற்களிலேயே பழகுவதால் இந்நூலாசிரியர் 'சொல்லும் பொருளும், போல் என்றார் போலும். சொல்லும் பொருளும் பிரியாதது போலத் திருநீறும் பொட்டுமாகவே அடிகள் எப்போதும் காட்சியளிப்பார் எனத் தெரிகிறது. மேலும் ஆனிடைக் கண்ணன் வேய்ங்குழல் வென்றோன் (16) தடவிடு மொருவீணை தன்னினிமை வென்றவா (33) ஏழிசையே எழுந்தோருருவாய் வந்தமகன் (77) என்றெல்லாம் அடிகளின் இனிய குரலைக் கவிஞர் பாராட்டுகிறார். சிலையுடனொரு மாரன் புவிவரல் போலானாய் (83) என்று அடிகளின் மன்மதனை ஒத்த மேனியழகைப் பாராட்டுகிறார்.

உருவகம்: உவம உருபினை நீக்கி உவமையை மாற்றிப் போட்டால் உவமை உருவகமாகி விடும். உவமையில் உவமேயத்தைவிட உவமானம் உயர்ந்தது. ஆனால் உருவகத்தில் இரண்டும் ஒன்றே என்ற சமநிலையைக் கூறி உவமேயத்திற்கு முதலிடம் கொடுப்பது மரபு. இவ்வுருவக அணியின் அருமையை யறிந்த கவிஞர் அரிதான ஓர் உருவகத்தைப் படைக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/123&oldid=1595012" இலிருந்து மீள்விக்கப்பட்டது