உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம் ‘துப்புர வாய்மன மெய்மொழி யாக்கியே

தூமனப் பூவிருத்தி

சொற்சுவைத் தேன்மணம் சூழ்கவி தந்திடுந் தும்பியைய சலிப்பாம்’

தேனைத் தந்திடும்

6

99

4

'கவிதைத் தும்பிக்கையனாகிய தும்பியைத் தூய்மையான மனமாகிய ஆவில் வைத்துப் போற்றுவோம்' என்பது பொருள். ஈண்டு மனம் என்பது பூ. மனதில் வந்து தங்கும் தும்பிக்கையானாகிய விநாயகன் வண்டின் இனமாகிய தும்பி; சொற்களாலான கவிதை என்பது தேன்.

பூவில் தேனிருப்பது இயல்பு. அத்தேனை வண்டு உண்ண ருவதும் மரபு. ஆனால் ஈண்டுத் தும்பி தேனை உண்ண வாராமல் கொடுக்க வருகிறது என்கிறார் கவிஞர். 'சொற்சுவைத் தேன் மணம் சூழ்கவி தந்திடும் தும்பி' என்ற வரிக்கு ‘மனமாகிய பூவில் சொல்லாகிய தேன் சூழ்ந்த கவியைத் தந்திடும் தும்பி' என்பது பொருள்.சொற்களாலானது கவி. சொல் தேன் என்றால் சொற்களாலான கவிதையும் தேனன்றோ! எனவே 'சொற்சுவைத் தேன் மணம் சூழ்கவி' என்பது கவித்தேன் என்பதாகப் பொருள்படும். 'கவிதந்திடும் தும்பி' என்றதால் மனமாகிய பூவில் இயல்பாகத் தேறாமல் தும்பி கொணரும் தேனையே மனப்பூப் பெற்றுக்கொண்டது என்பது பொருள். ஆக தெய்வீகத் தன்மை பொருந்திய விநாயகனாகிய வண்டு தேனை எடுக்க வாராமல் காடுக்க வந்தது என்ற கற்பனை பொருத்தமுடையதாகவே உள்ளது.‘அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்றாற் போலத் தும்பி மனமாகிய பூவில் கவிதைத் தேனை அருள அவ்வருளாலேயே கவிஞர் யானைமுகனாகிய தும்பியைத் தம் மனப்பூ இருத்தி அசலிக்க விரும்புகிறார் எனலாம். இவ்வாறாக அவனின்றிக் கவிதை எழுத இயலாத அவர் தம் விநாயக வழிபாட்டு முறையை உருவகப்படுத்திக் காட்டுவது மிகவும் நயமாக உள்ளது.

மறைமலையடிகளைப் பற்றி: 'சின்னம்மை சொக்கனார் தாம் பெற்ற செல்வமே' (11) என்று அடிகளின் தாய் தந்தையரை அறிமுகப்படுத்துகிறார் கவிஞர். நாகப்பட்டினத்தையடுத்த காடம்பாடியில் அடிகளின் தந்தை சொக்கநாதர் மருத்துவராக விளங்கினார் (16). பெற்றோர் குழந்தைப் பேற்றிற்காகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/124&oldid=1595013" இலிருந்து மீள்விக்கப்பட்டது