உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் -34 *

திருக்கழுக்குன்றத்துச் சிவனை யெண்ணி நோன்பிருந்து பெற்றதால் (11) அடிகள் வேதாசலம் எனப் பெயர் பெற்றார். சைவ வேளாளர் வகுப்பைச் சார்ந்தவர் (17). ‘பரணியிற் பிறந்தார் தரணியை ஆள்வார்' என்பதற் கொப்ப ‘ஓங்கிய தரணி யாண்டிடப் பரணி ஓச்சிய நன்னாளில்' (17,92) பிறந்தார். இறையருளால் தோன்றிய காரணத்தால் மீண்டும் பிறவாப் பெருநெறியுடன் வாழ்ந்தார். 'தாயின் கருப்பேறார் நெறி தாம் போற்றிடத் தோன்றி' (5) என்கிறார் பாவலர்.

என

மறைமலையடிகள் என்றாலே தனித்தமிழ்த் தந்தை என்ற நினைவு அனைவருக்கும் எழுவது இயல்பு. 'உருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டு துரந்ததுபோல்’ இளங்கோவடிகள் கூறியது போல இயல்பாகவே தமிழ் மீது பற்றுக்கொண்ட அடிகளை /"பெற்ற தாய்தனை மகமறந்தாலும் என்ற இராமலிங்கரின் அருட்பாவிலுள்ள 'தேகம்' என்ற சொல் தனித்தமிழ்ப் பணியாற்றத் தூண்டியது. (78) இதனால் ‘தனித்தமிழ்ச் செப்பமும் செய்துலகு திறம்புரிய வைத்த செம்மல்’ எனப் பாவலரால் பாராட்டப் பெற்றார்.

...

....

பிறமொழிகள் தமிழில் கலப்பதைத் தம் அறிவால் பொறுத்துக்கொள்ளாத அடிகள் முதலில் பிற மொழிக்கலப்பை நீக்குவதையே தம் பெரும் பணியாகக் கொண்டார்.

“புரியாத மொழிநீக்கிப் புத்துணர் வூட்டிய

பொற்புடை யமுதவூற்றே”

என்றும்,

‘சந்தைக் காணா வேற்றுமொழி

தண்ணார் தமிழில் தாள்கூட்டிச்

சரளத் தமிழாய் மாற்றியதைத்

தாளா மதியிற் கூராளா

14

தத்தாய் வந்த மொழிநீக்கத்

தரவே வந்தாய்'

22

என்றும் பல வகையில் அடிகளின் தமிழ்ப் பணி பாராட்டப் படுகிறது. உரிமையில்லாத மொழி உரிமை கொண்டாட வந்த நிலையைத் ‘தத்தாய் வந்த மொழி' என்ற நகைச்சுவையுடன் கூறியிருப்பது பாவலரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/125&oldid=1595014" இலிருந்து மீள்விக்கப்பட்டது