உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

101

தற்காலத் தமிழ்மொழி வரலாற்றில் இந்தி எதிர்ப்பு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அடிகள் காலத்தில் தான்இந்தி எதிர்ப்புணர்ச்சி உருப்பெற்றது.

எனவே

அவ்வெதிர்ப்புணர்ச்சியாகிய வரலாற்று நிகழ்ச்சியை நீக்கி அடிகளைத் தனித்துப் பார்ப்பதென்பது இயலாது.

66

‘வருமுரு மிந்தி யெனுமயல் மொழியின்

வருகையை முறியடிக்க”

89

என்று இடிபோல வந்த இந்தி மொழியைத் தடுத்து நிறுத்திய பெருமையைச் சுட்டுகிறார் கவிஞர். “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்ற கொள்கையைப் பரப்பியவர் மறைமலையாரே யாவார். தமிழ் வழிச் சிந்தனையே தமிழரை வாழ வைக்கும் என்ற உயர்ந்த நம்பிக்கை கொண்டவர். மொழித் தொண்டைப் போலவே சமயத்தொண்டும், சமூகத்தொண்டும் செய்தவர்.

“செல்வரைப் பாடாது சிவன்புகழ் பாடினோய்' “செழுங்கை மணக்க நீறணிந்து”

"சிறவாத பொய்மூடச் சிறுமைதாவித்”தவர்

“கொள்கையில் மாறாது வெல்வதில் வல்லவன்

99

85

80

84

36

எனக் கவிஞர் ஆங்காங்கே கூறிச் செல்வதால் அடிகளின் வாழ்க்கை பிறருக்கு அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது என நன்றாக உணரமுடிகிறது.

தமிழ்மொழி வாழ வேண்டி இறைவனே மறைமலையை

யனுப்பி வைத்தார் எனப் பாவலர் கூறுகிறார்.

"தேனினு மினியசெந் தமிழீந்த தெய்வமாம்

திருத்தில்லை நகரவேந்தன்

தேர்ந்திந்தப் புவிமீது செந்தமிழ் வாழ்ந்திடச்

செய்திடற் கெண்ணமிட்டே

மானிடப் பிறப்பினில் மாட்சிகொள் தண்ணருள்

மலர்ச்சியா முயிரவைத்து

மங்காத வொளிநிறை மறைமலையெனுமுரு

மன்னுபுகழ் சேர்த்தளிக்க”

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/126&oldid=1595015" இலிருந்து மீள்விக்கப்பட்டது