உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறைமலையம் -34 *

இக்கருத்து “என்னை நன்றாக இறைவன் படைத்தனன். தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே" என்ற திருமூலரின் கருத்தோடு ஒப்புநோக்குதற்குரியது. இங்ஙனம் கூறிய பாவலர் அடிகள் மீது கொண்ட ஆர்வத்தால் 'இறைவனே மறைமலையடி அவதரித்தார்’ என மற்றோரிடத்தில் வாயாரப்

களாக

புகழ்கின்றார்.

“இறங்கிக் கருணை வடிவாக

இறையே துணித்து ஒளிவிளக்காய்

இருளை யகற்றும் ஒளிவிளக்காய்

இயக்கு சக்தித் திருவிளக்காய்ப்

பிறங்கு தமிழை யுலகனைத்தும்

பெரிதாய் விளங்கச் செயவந்த

பெருமைக் குரியாய்"

73

உலகில் தீமைகள் மிகுதியாகும்போது நான் தோன்றுவேன் என்று கண்ணபிரான் கூறியது போலத் தமிழிற்கும் தமிழினத்திற்கும் தீங்கு வந்துவிட்ட காரணத்தால் இறைவனே மறைமலையாகத் தோன்றினார் எனப் பாவலர் கூறுவது போற்றுதற்குரியதாக உள்ளது.

திருவள்ளுவர் ஆண்டு என்ற ஒன்றை (51) அடிகள் உறுதிப்படுத்தித் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது அடிகளின் வரலாற்றில் மிக மிகப் போற்றுதற்குரிய பகுதியாகும். திருஞான சம்பந்தர் சமணர்களைச் சைவர்களாக மாற்றியது போலவே அடிகள் கடம்பவன சுந்தரப் பாதிரியாரின் குடும்பத்தையே கிருத்துவத்திலிருந்து சைவத்திற்கு (95) மாற்றினார். தம் காலத்து வாழ்ந்த தவத்திரு ஞானியாரடிகள், திரு.வி.க.பண்டிதமணி போன்றோருடன் நட்புக் (79) கொண்டிருந்தார். தமிழர் நலங்குறித்துப் பல்வேறு நூல்களைச் செய்தார். அவைகளுள் முல்லைப் பாட்டாராய்ச்சி, மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கதாகும். அடிகள் தந்த இலக்கியமாகப் புகழ்பெறுவன சோமசுந்தரக் காஞ்சியாக்கமும், திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவையும் ஆகும். அடிகள் குடும்பமே தமிழ்க் குடும்பம் (76) என்பதில் ஐயமில்லை. அடிகளின் வரலாற்றை ஆராய்வார்க்கு இந்நூல் சிறந்த காலப் பெட்டகமாக இலங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/127&oldid=1595016" இலிருந்து மீள்விக்கப்பட்டது