உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

103

செய்யுட் சிறப்பு: பிள்ளைத்தமிழின் எல்லாப் பகுதியும் சுவையுள்ளனவே. இருப்பினும் எண்சாண் உடம்பிற்குத் தலையே சிறப்புடையது போலப் பருவங்களுள் அம்புலிப் பருவமே சிறப்புடையதாகும். கவிஞரின் புலமையை இப்பருவமொன்றைக் காண்டே அறிவது வழக்கம். நிலவைக் குழந்தையோடு ஒப்பிட்டுரைக்கும் பாடலில் பல ஒப்புமைகள் கூறப்படுகின்றன. மறைமலை யார்தாங்க வருவைநீ இவன்பெயர் மறைமலை தாங்கி வருவான்'

61

திருக்கழுக்குன்றத்து ஈசனுக்கு வேதாசலம் என்று பெயர். அச்சொல்லை மறைமலை யென்றாக்கி அடிகட்கும் இறைவனுக்கும் உள்ள அப்பெயர் ஒப்புமையால் சந்திரனைக் கூறியழைப்பது நயமாக உள்ளது.

‘நறைசெறி அல்லிநகை மலரவரு வாயிவன் நலவல்லி மலரவருவான்

நதிசேரும் கடல்பொங்க வருவைநீ யிவன்தமிழ்

நவில்கடல் பொங்கவருவான்'

61

அல்லி என்பது மலரையும் அடிகளின் மனைவி செளந்தர வல்லியையும் குறிக்கிறது. சந்திரனால் கடல் பொங்குதல் போல இக்குழந்தையால் தமிழ்க்கடல் பொங்குகிறது. அடுத்துக் குழந்தையைத் திங்களோடு வேறுபடுத்திக் கூறும்போது,

“மங்கையொரு பங்கன்முடி நீயுற்றாய் அவனையிவன் மனக்கோயில் தன்னிலுற்றான்”

63

என்கிறார். நிலவு சிவன் முடியில் தங்குகிறது. ஆனால் சிவனோ குழந்தையின் உள்ளத்தில் தங்குகிறான். இங்ஙனம் உணர்த்தும் வேறுபாட்டில் ஓர் இலக்கிய நயம் காணக்கிடக்கிறது.

சிவனின் முடியில் என்று கூறாமல் 'மங்கையொரு பங்கன்முடி' என்றதால்ஆண் பெண்ணாக விளங்கும் சிவனின் ஆண்பாற் பகுதியில் மட்டுமே சந்திரன் தங்கியுள்ளான் எனத் தெரிகிறது. சத்தியை விட்டுச் சிவன் பிரிந்திருக்க முடியாததால் குழந்தையின் உள்ளத்தில் சிவன் ஆண்பாற் கூறாக மட்டும் தங்காமல் மாதொரு பாகனாகவே தங்கும் நிலை ஏற்பட்டு விட்டது. எனவே அடைக்கலம் எனப் போய்த்தங்குதற்கிடமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/128&oldid=1595017" இலிருந்து மீள்விக்கப்பட்டது