உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் - 34

சிவன் தன் மனைவியோடே குழந்தையின் உள்ளத்தில் தஞ்சம் புகுந்து தங்கி விடுவதால் நிலவினும் குழந்தை சிறப்புடைய தன்றோ! மேலும் நிலவின் முழுவடிவம் சிவனின் முடியில் தங்காமல் அதன் ஒரு கூறாகிய பிறை மட்டுமே தங்குகிறது. ஆனால்இறைவனோ முழு வடிவினனாய் உள்ளத்தில் தங்கியுள்ளான். இப்படியெல்லாம் வேறுபாடுகள் தோன்றுமாறு கவிஞர் பாடியுள்ளது வியந்து மகிழத் தக்கதாயுள்ளது.

‘தங்குமொரு வடமேற்குத் திசையுனக் கிவனுக்கு

சரியுரிமை எத்திசையுமாம்'

63

என்று கூறும் மற்றோர் பாட்டில் சந்திரன் வடமேற்காகிய ஒரு திசையில் மட்டும் தோன்றுவதையும் அடிகள் எல்லாத் திசைகளிலும் புகழுடன் தோன்றுவதையும் வேற்றுமையாகக் காணமுடிகிறது. ஈண்டு மேற்கு என்று கூறாமல் வடமேற்கு என்பதைக் கூர்ந்து நோக்கினால் ஓர் உண்மை விளங்கும்.

மேற்கு என்பது நாற்றிசையுள் ஒன்று. ஆனால் வடமேற்கு என்பது எண்டிசையுள் ஒன்று. (1. வட, 2. தென்கிழக்கு, 3.கிழக்கு, 4. வட, 5. தென்மேற்கு, 6. மேற்கு, 7. தெற்கு, ஒருவராகக் கொள்ளாமல் ஆயிரத்தில் ஒருவராகக் கொண்டது போலக் கவிஞர் அடிகளை நாற்றிசையுள் அடக்காமல் எண்டிசையில் அடக்கி, அவர் தம் புகழ் சென்று பரவும் எல்லையின் விரிவைக் கூறினார் எனலாம். 'நில்லா தொழிந்த உயிராவி

நிலையுந் தெளியக் கூறியவாய்

நிறைய முத்தம் வைத்திருந்தும்

நிலையா மணிகொள் சிற்றில்மேற்

செல்லா திருக்க மனமில்லையோ

சிறியேம் சிற்றில் சிதையேலே”

74

என்று சிற்றில் பருவத்தில் சிறுமியர் வேண்டுவதாய்ப் பாடும் திறம் நினைந்து இன்புறத் தக்கதாயுள்ளது.

ஒப்புமை: ஒரு நூலின் தரத்தை யறிய ஒப்பியல் ஆய்வு தேவை. பாவலர் பாவலர் பல நூல்களையும் கற்ற அனுபவத்தில் அடையாளங்களை ஆங்காங்கே காட்டியுள்ளார். திருச்செந்தூர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/129&oldid=1595018" இலிருந்து மீள்விக்கப்பட்டது