உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

105

பிள்ளைத்தமிழில் “முத்தம் தனக்கு விலையில்லை” எனக் கூறும் பகழிக் கூத்தர் போல இந்நூலாசிரியர்,

‘மெருகில் குறைதல் மறைதலெனு

மிழிவைப் பெறலா லவைநீக்கி”

எனச் சித்திரித்துக் காட்டும் அழகு போற்றுதற்குரியதாகும்.

‘தெங்குங் கதலித் தீங்கனியுந்

திரண்ட முலைசேர் பசும்பாலும்

செழித்த கரும்பின் நறும்பாகும்

செறிந்த சுவையின் பெரு சுவையே'

42

27

என்ற தாலப் பருவப் பாடல் “தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டி” என்ற அருட்பாவைப் போல பாடப்பட்டுள்ளது.

66

‘வழுவா யெனு சீர் மனையாள்வாய்

ளவடிவாய் மெதுவா யிதழ்சேர்த்து

வரிவாய்ச் சுடர்பல் விடையூறும்

66

வளைவாய்ச் சுவைநீர் பருகியவாய்”

43

‘தூமனப்பூ (4) என்று மனதைப் பூவாக உருவகப்படுத் தினார் பாவலர். 'மலர்மிசை யேகினான்' என்ற குறள் உரையில் பரிமேலழகர் உள்ளக் கமலத்தின் கண்... என்று நெஞ்சைத் தாமரையாக உருவகப்படுத்தியுள்ளார். 'உள்ளப் புண்டரீகம்' எனத் திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை தேவாரத்தில் கூறுகிறார். ‘உழுதிடு மொருசெயில் உழவன்றன் பொழுதினை யுணர்வொடு போக்குதல் போல்

ஒளியுமிழ் தமிழெனுங் கழனியிற் பொழுதினை யொருங்குறத் தேக்கியவன்’

என்று அடிகளை ஓரேருழவனாகக் கூறப்பட்ட செய்தி,

“மிடியன் ஒருசெய்யாளன் அச்செய்வினையக்காக்கும் செயல்போல

51

என்று கூறும் நல்லாற்றூர் சிவப்பிரகாசரது பிரபுலிங்கலீலைப் பகுதியோடு ஒப்பு நோக்குதற்குரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/130&oldid=1595019" இலிருந்து மீள்விக்கப்பட்டது