உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

-

மறைமலையம் - 34 *

முடிவுரை: பாட்டு என்பது பாவலனின் கையிற்கிடைத்த ஒரு மந்திரக்கோல். அதைக்கொண்டு அவன் உணர்வுலகத்தை ஆட்டிப்படைக்கிறான். இந்த வகையில் பாவலர் அன்பானந்தத் தின் பாடல்கள் L மறைமலையடிகளை உயிர்ப்பித்துக் காட்டுகின்றன. இலக்கியம் படைக்கும் கவிஞனைப் பிரமனுக்குச் சமமாகக் கூறுவதுண்டு. இக்கவிப்பிரமர் மறைந்தும் மறையாமலிருக்கும் மறைமலையடிகளைக் குழந்தையாக்கி இந்நிலவுலகில் விளையாட விட்டுள்ளார். வெள்ள நீர் உழக்கினில் அடங்காதது போல என் உரைத் திறத்தால் இந்நூலின் சிறப்பை அளக்க இயலாது. எனவே கவியின்பம் நாடுவோர் இப்பிள்ளைத் தமிழ் வெள்ளத்தில் இன்புறத் திளைத்துப் புனலாடுவார்களாக.

மருவார் கொன்றை மதிசூடி

மன்றுள் ளாடும் பெருமானை

மனத்துட் கொண்டு நிகழுமுழு

மதியே வருக வுளக்கோவில்

தருவா கென்றே தவஞ் செய்யுந்

தளிராம் செளந்த ரத்துக்குத்

தனையே தந்து நிழலீந்த

தருவே வருக தனித்தமிழை

யுருவா யாக்கி யுலகளித்த

வுயிரே வருக வுயர்சைவ

வொளியே வருக மறைமலையா

யுயர்ந்தாய் வருக வுண்ணவுண்ண

வருவா னமுதே தமிழ்தந்த

வாழ்வே வருக வருகவே

வழுவாச் செழுமைப் புகழுடையாய்

வருக வருக வருகவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/131&oldid=1595020" இலிருந்து மீள்விக்கப்பட்டது