உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் -34 *

மறைமலையடிகள் வரலாறு

செந்தமிழ் நாடு செய்த தவப்பயனாய் அலை தவழும் நாகப்பட்டினத்தை யடுத்த காடம்பாடி என்னும் சிற்றூரில் மறைமலையடிகள் 15-7-1876 இல் தோன்றினார். தந்தையார் மருத்துவர் வேலை பார்த்த சொக்கநாதர். தாயார் சின்னம்மை. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கேற்ப அடிகளின் கல்வியும் ஒழுக்கமும் அனைவரும் வியக்குமாறு ஆக்கமுற அமைந்தன. 'ஒருமைக்கண் தான் கற்ற கவ்லி ஒருவற்கெழுமையும் ஏமாப் புடைத்து' என்ற குறட்பாவிற் கிணங்க அடிகள் தம் பதினாறாம் அகவைக்குள் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். வடநூலும் ஆங்கிலமும் நன்கு கற்றார். நாகையில் ஓலைச்சுவடி விற்பனை செய்து வந்த வெ.நாராயணசாமி பிள்ளையிடம் தமிழ் கற்றார். சன்னை.சோமசுந்தர நாயகரிடம் சைவ சித்தாந்தங்களைக்

கற்றார்.

மனோன்மணீய நாடக ஆசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களால் திருவனந்தபுரத்தில் முதன்முதலில் தமிழாசிரியர் வேலைக்கு அமர்ந்தார். பின் தமிழ்ப் பேராசான் பரிதிமாற் பரிதிமாற் கலைஞரின் பேருதவியால் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பதின்மூன்றாண்டுகள் பணியாற்றினார். ஆசிரியத் தொழிலை விட்டு விலகி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற தமிழரின் கொள்கையைப் பரப்ப வேண்டி பல்லாவரத்தில் "பொது நிலைக்கழகம்” கண்டார்.

நாடு முழுவதும் சென்று தமிழ்ப் பணியோடு சைவப் பணியும் சமூகப் பணியும் செய்தார். கடல் கடந்த இலங்கைக்குச்

சன்று பல இடங்களில் சொற்பொழிவாற்றினார்.

சொற்பொழிவில் கிடைத்த பொருள்களையெல்லாம் தாம் நிறுவிய பொது நிலைக் கழகத்திற்கே தந்துதவினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/133&oldid=1595022" இலிருந்து மீள்விக்கப்பட்டது