உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

109

திருப்பாதிரிப்புலியூர் தவத்திரு ஞானியாரடிகள் முன்னிலையில் சைவ சித்தாந்த சமாசம் நிறுவினார். திருவள்ளுவராண்டு என்ற தமிழ்ப் புத்தாண்டை அறிமுகப்படுத்தினார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கிய அடிகள் இந்தியென்னும் நச்சரவிற்கு இடியாக விளங்கி இந்தி எதிர்ப்புணர்ச்சியால் தமிழர்களுக்கு மொழிப்பற்றை யூட்டினார்.

அடிகள் சித்தாந்த தீபிகை, அறிவுக்கடல் போன்ற திங்கள் இதழ்களுக்கு ஆசிரியராக விளங்கினார். பல இதழ்களில் காய்தல் உவத்தலின்றிப் பல கட்டுரைகளையும் மறுப்புரைகளையும் எழுதினார். சாகுந்தல நாடகத்தை மொழி பெயர்த்தார். முல்லைப் பாட்டாராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, திருவாசகவுரை, மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி, நூறாண்டுகள் வாழ்வது எப்படி போன்ற அடிகளின் நூல்கள் அவர்தம் புலமைக்கு உரை கற்களாக நிற்கின்றன. திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் போன்ற அடிகளால் இயற்றப்பட்ட இலக்கியங்கள் தமிழுள்ள அளவும் நின்று நிலவும் என்பதில் ஐயமில்லை.

66

“இல்லறமல்லது நல்லறமன்று” என்பதற் கிணங்க அடிகள் பதினெட்டு வயதிலேயே சவுந்தரவல்லி என்பாரை மணந்து ல்லறத்தை மேற்கொண்டார். சிந்தாமணி, நீலாம்பிகை, திருஞானசம்பந்தன், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி, திரிபுரசுந்தரி என்ற மக்கள் அடிகட்குப் பிறந்தனர். வேண்டின் உண்டாகத் துறக்க' என்ற வள்ளுவரின் கருத்திற் கிணங்க இல்லறத்தினின்றும் துறவுநிலை மேற்கொண்டாலும், அடிகள் தமிழையும் தமிழ்ப் பணியையும் துறந்தாரல்லர். அடிகள் தம் எழுபத்தைந்தாம் அகவையில் 15-9-1950 இல் அம்பலவாணர் திருவடிகளை அடைந்தார். நடமாடும் பல்கலைக்கழகமாக விளங்கிய மறைமலையடிகள் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்மொழி வரலாற்றில் ஓர் இளஞாயிறு எனலாம்.

வாழ்க மறைமலையடிகள் புகழ்!

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/134&oldid=1595023" இலிருந்து மீள்விக்கப்பட்டது