உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் -34 *

நான்முகன்

(வேறு)

நிலையாய சீர்மறை நான்கினைக் கையேந்தி

நெடியவுல கம்படைத்தே

நீதிநெறி மாறாது நித்தமும் மெய்யத்தவம் நிகழ்ந்திடும் நான்முகத்தோன்

கலையா ஓர்மாதை'க் கண்ணினும் மேலாகக் கருதியே நாவிலன்பாய்க்

கானமெழு வீணையொடு காலமெல் லாம்வைத்துக் களிக்கின்ற வன்புரக்க.

தலையாய சைவசித் தாந்தங்க ளத்தனையும் தணியாத வேட்கையோடு

தான்தக்க குரு நாடித் தன்னிளம் வயதுளே

தகவோடு கற்றபிள்ளை

மலையாய வடநூலும் மாண்புவெண் மக்களின்3

மணியான வெள்ளைநூலும்4

மாட்சியாய்ப் பெற்றருள் ஆட்சியாய்க் கற்றெழும்

மறைமலைச் செல்வனையே.

3

1. கலைமகள்

2. அடிகளின் ஞானாசிரியர் சோமசுந்தர நாயகர்

3. வெள்ளையர் (ஆங்கிலேயர்)

4. ஆங்கிலமொழி நூல்

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/145&oldid=1595034" இலிருந்து மீள்விக்கப்பட்டது