உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

தூங்கிக் கிடந்த தமிழ்நாட்டில்

சுடரு மொளியாய்த் தோன்றியிருள்

சூழா தோடச் செய்துநெஞ்சில்

துவளா எண்ணந் தோற்றுவித்தே

ஆங்கி லத்தொடு வடநூலில்

அருமைப் புலவர் பெற்றபயன் அனைத்துந் திரட்டிச் செந்தமிழில்

அழகார் நூல்கள் பதிப்பித்தே

ஏங்கிக் கிடந்தா ருரிமைக்கு

எழுச்சிக் குரலை எழுப்பித்தே இணையில் புதுமைத் திட்டமெலாம்

இசையத் தேடிக் கொடைசெய்தே

தாங்கிக் களித்து மாந்தருளத்

தடத்தே நிற்போய் தாலேலோ

139

தனித்த தமிழைத் தந்தபசுந்

தளிரே வொளியே தாலேலோ

23

அடிகள் ஆங்கில மொழியிலும், வடமொழியிலும் நல்ல பயிற்சித்திறன் உடையவர் நாட்குறிப்பெழுதுவதும், தம் நூல்களுக்கு முன்னுரை எழுதுவதும் ஆங்கிலத்தில்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/164&oldid=1595053" இலிருந்து மீள்விக்கப்பட்டது