உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் -34 *

பத்தோ டாறா மாண்டிற்குள்

பசுமைத் தமிழ்முற் றுங்கற்றுப்

பழகுந் தமிழைக் கற்பிக்கும்

பணியைச் செய்து பேர்பெற்றுச்

சித்தி ரைசேர் வெண்மதியாய்த் திகழ்பைந் தமிழாம் வானத்திற்

சிறிது மிணைஈ டில்லாதே சிறந்த புலமைச் சீராளா

சத்தைக் காணா வேற்றுமொழி தண்ணார் தமிழில் தான்கூட்டிச் சரளத் தமிழாய்' மாற்றியதைத் தாளா மதியிற் கூராளா

தத்தாய் வந்த மொழி நீக்கந்

தரவே வந்தாய் தாலேலோ

தனித்த தமிழைத் தந்தபசுந்

தளிரே வொளியே தாலேலோ.

1. மணிப்பிரவாள நடை.

2. இயற்கையால் உரிமையில்லாது, வந்து கலந்த மொழி.

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/163&oldid=1595052" இலிருந்து மீள்விக்கப்பட்டது