உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

3. தாலப் பருவம்

(ஆசிரிய விருத்தம்)

வண்ணங் கருத்த வெள்ளைமனம்

வடித்த செம்மைக் குணங்கொண்டு

6

வளையா மனமும் வளைந்திசைய

வைக்குந்தந் துணையாய்ச் சவுந்தரத்தை

எண்ணம் விரும்பிக் கொண்டதுபோல்

இணைந்த வாழ்வில் நலமெல்லாம்

இனிதாய்ப் பெற்றுப் பெருவாழ்வில்

எல்லாங் கொண்டு மகிழ்வுற்றுத்

திண்ணப் புகழும் சீர்சிறப்புத்

தெளிந்த தெய்வ நல்லருளும்

செழிக்கச் செய்யும் மேன்மக்கட்

செல்வம் முழுதும் பெற்றுதமிழ்

1

தண்ணம்' பிடித்த அம்பலவன்

தரவே கொண்டோய் தாலேலோ

தனித்த தமிழைத் தந்தபசுந்

தளிரே வொளியே தாலேலோ.

1. மழு

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/162&oldid=1595051" இலிருந்து மீள்விக்கப்பட்டது