உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

L

3. தாலப் பவரும்

தாலப் பருவம் என்பது குழந்தையைத் தொட்டிலில் கண் வளரச் செய்ய உரிமை மகளிர் நாற்புறமும் சூழ நின்று தம் நாவினாற் பாடி அத் தொட்டிலையாட்டுவதாகக் கூறப்படும் பருவமாகும். ஐந்தாம் திங்களில் தலைநிமிர்த்திப் பழகிய குழந்தை, ஏழாம் திங்களில் பிறர் கூறும் ஒலி வேறுபாடுகளையும், குரல் வேறுபாடுகளையும் ஓரளவு புரிந்து கொள்ளுமாதலின், குழந்தை உறங்குதற்கெனப் பாடப்பெறும் பாட்டையே தாலாட்டு என்பர். தால் என்பது தொங்குதல் என்ற பொருளில் நாவைக் குறிக்கும். எனவே குழந்தையைத் தூங்க வைக்கத் தாயர்கள் தாலேலோ, தாலேலோ என மெல்லிய இனிய இசை எழுப்பிப் பாடுதற் பொருட்டு நாவசைத்தலால் தாலப் பருவம் எனப்பட்டது.

L

99

பிள்ளைத் தமிழ் நூல்களில் குழந்தையைத் தூங்கச் செய்வதாகப் பாடல்கள் அமையவில்லையாயினும் இந் நூலாசிரியர் "தொட்டில் தனிலே தாலேலோ' என்று குழந்தையைத் தொட்டிலில் தூங்கச் செய்வதாகப் பாடியது சிறப்பாக உள்ளது.

தாலப்பருவம் என்பதற்கு நாவை அசைத்துச் சொற்களைப் பயிலச் செய்யும் பருவம் என்றும் கூறலாம். அதாவது தாயார் தம் குழந்தைகளுக்குத் தம் நாவினை அசைத்துக் காட்டி அவ்வாறு அசைத்து ஒலியெழுப்பும்படிக் கூறுவதாக அமைக்கும் பருவம்.

வீட்டை இன்பத்தால் ஆளவந்த குழந்தைக்குப் பாடப் பெறும் தாலாட்டு, நாட்டை ஆளவந்த மன்னன் உறங்கச் செல்லும்பொழுது ‘கண்படைநிலையாகப் பாடும் இலக்கிய வடிவம் பெற்ற தெனத் தொல்காப்பியத்தால் உணரமுடிகிறது. பிள்ளைத் தமிழில் தாலப் பருவம் என்ற ஒன்றே வாய்மொழி இலக்கியமான தாலாட்டு என்ற தரத்தைப் பெற்றுள்ளது என்பது இப்பருவத்திற்குரிய சிறப்பாகும். இசைத்தமிழ் வளர்ச்சிக்கு இப்பருவமே வித்து எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/161&oldid=1595050" இலிருந்து மீள்விக்கப்பட்டது