உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

(வேறு)

மதுரை நகர்த்தமிழை யமுதா யெடுத்துரைத்த

மணிவாயின் முத்தமருளே

மறையாய் விளங்குதமிழ்த் துரையே எனக்குனது மணிவாயின் முத்தமருளே

பொதுவிற்1 சுழன்றுநடம் புரிவோன் திறம்பேசும்

புகழ்வாயின் முத்தமருளே

புரியா மொழிக்கலவை புரிந்தார் தமைக்கடிந்த புகழ்வாயின் முத்தமருளே

எதுமெய்த் தனித்தமிழென் றிசைத்தோ யெனக்குமல ரிதழ்வாயின் முத்தமருளே இறவாப் புகழுடம்பி லிருப்பா யெனக்குமல

ரிதழ்வாயின் முத்தமருளே

2

கதுவுந் தமிழ்ப்புலவ கலையே யெனக்குனது

கனிவாயின் முத்தமருளே

கதுப்பையணைத்துனது களிப்பா லெனக்குனது

கனிவாயின் முத்தமருளே.

1. மன்றம், தில்லைப் பொன்னம்பலத்தைக் குறித்தது. 2. மிகுதியான பற்றுக்கொண்ட

3. கன்னம்

165

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/190&oldid=1595079" இலிருந்து மீள்விக்கப்பட்டது