உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் -34 *

வெள்ளைநன் மக்கள்' வித்தக நூற்கள்

விரிவா யாராய்ந்து

விழைவுடன் கற்போர் வியந்திடு மாறு விளக்கிட நூல்செய்து

தெள்ளிய ராகி நந்தமிழ் மக்கள் சிறப்பினில் மேம்படவே

சிறிதும் பொழுதைச் சிதைவாக் காமற்? செயல்புரி தெள்ளமுதே

துள்ளிடு தீமதி யுள்ளமுங் கொண்டோர் தொடுத்திடு போர்க்கணைகள்

துவண்டு றைந்திடத் தூய்தமிழ்க் கணைகள் துலங்கிடச் செய்துபுகழ்

முள்கிடக் கொண்ட முத்தமிழ்த் தலைவ

முத்தந் தந்தருளே

முருகர் மும்மணிக் கோவை செய்தவ

முத்தந் தந்தருளே.

46

1. ஆங்கிலேயர்.

.

2. அடி கள் சிறிதும் நேரத்தை வீணாக்காமல், நூல்களைப் படிப்பதிலும் ஆய்வுகள் எழுதுவதிலும் ஈடுபடுவர். சென்னையில் எந்தப்பொது சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் போகமாட்டார் என்பது

வரலாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/189&oldid=1595078" இலிருந்து மீள்விக்கப்பட்டது