உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

163

(வேறு)

சைவசித் தாந்தக் கழகம்' நிறுவித்

தக்கவர் துணையோடு

சமயத் திருப்பணி சைவப் பெரும்பணி

தங்கு தடையின்றி

வைகலு மோங்கி வளர்ந்திட வைத்து வல்லமை மிக்கதமிழ்

வையக மெங்கணு மோசையெ ழுப்பிட வைத்தசு வைக்கனியே

கைவளை யோடுங் காதணி குலுங்கக்

கயற்கண் மொழிபேசக்

கரும்புத் தமிழ்செய் திறமுற் றிடுவாய்

களித்துச் சுவைபருகும்

மொய்குழல் சுந்தர வள்ளியின் கணவ

முத்தந் தந்தருளே

முருகர் மும்மணிக் கோவை தெய்தவ

முத்தந் தந்தருளே.

45

1. சைவ சமய வளர்ச்சிக்காக சைவ சித்தாந்த சபை நிறுவி அதன் தலைவரனார்.

2. அடிகள் திருவொற்றியூர் முருகனிடத்துக் கொண்ட ஈடுபாட்டால் திருவொற்றி முருகர் மும்மணிக்கோலை என்னும் நூல் இயற்றினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/188&oldid=1595077" இலிருந்து மீள்விக்கப்பட்டது