உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

(வேறு)

ஒருவனா யுலகேத்த வொளியாகி நின்றானை'

யுளவாயிற் சென்றமர்ந்தே

ஓருருவில் மூவுருவம் உண்டாக்கி மன்றாடி3

யுலகோச்சும் வெற்பன்தனை

மருவிடும் மலைமகள் மலர்முகம் ஒத்தொரு

மடமாதாய் வந்தமைந்தே

மானொயிலும் மீன்விழியு மட்டில்லாப் பேரழகும் மலர்நாணுந் தன்மையோடு

கருவினிற் றிருமேவக் கனிதமிழ்ச் செல்வநின் கருத்தோடு தோள்சேர்ந்தவள்

காணரிய தீந்தமிழின் கன்னலினை மி குசுவை

கவினுற அள்ளிநல்க

திருவினைத் தருமாழி யமுதெனிச் சுவைத்தவன்

திருவாயின் முத்தமருளே

தேனொத்த பைந்தமிழை வாழ்விக்க வந்தவன் திருவாயின் முத்தமருளே.

167

49

1.திருவண்ணாமலையில் ஒளியுருவமாக நின்றவன்.

2. உருத்திரன், திருமால், பிரமன் என மூன்று உருவமாக நின்ற சிவன்.

3. தில்லை மன்றில் நடனமாடி.

4. திருமகளைத் தந்த பாற்கடலில் தோன்றிய அமுதம்போல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/192&oldid=1595081" இலிருந்து மீள்விக்கப்பட்டது