உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் -34 *

வானவர் மறையோதி நாடொறும் வழிபட்டு

வருகின்ற கந்தவேளை

வதையுற்ற கொடுந்துன்ப வலைப்பட்ட நிலைபோக்க

வடிவேலை விட்டதேவை

கானமர் புனமேறிக் காவலுட் படும்வள்ளிக் கனியுள்ள முற்றகோவை

கலைமேவு கொடிமுல்லை யெனுந்தெய்வ குஞ்சரிக் கருள்செய்த செந்திவாழ்வை

தானவர்3 படைவென்று வாகையும் புனைமார்பு

4

தனிற்சந்தங் கொண்ட வேலைத்

தனக்கேற்ற துணையாக்கித் தமிழ்செய்த குருபரன்

தனைப்போல் நாடுமுற்றுந்

தேனடைத் தமிழின்பத் தானெடுத் துரைத்திட்ட

திருவாயின் முத்தமருளே

சீரொத்த பைந்தமிழின் பேர்சொல்ல வைத்தவன்

திருவாயின் முத்தமருளே.

50

1. தெய்வயானை

2. திருச்செந்தூர் முருகன்

3. அசுரர்

4. அழகு

முருகனருள் பெற்ற குமரகுருபரர் நாடு முழுவதும் சென்று தமிழ் பரப்பியது போல அடிகளும் தமிழ் பரப்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/193&oldid=1595082" இலிருந்து மீள்விக்கப்பட்டது