உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

6. வருகைப் பருவம்

வருகைப் பருவம் என்பது தளர் நடையிட்டு வரும் குழந்தையை வருக வருக என்று கை காட்டி அழைத்து நடப்பிக்கும் செய்தியை விளக்கும் பருவமாகும். இதை 'வாரானைப் பருவம்' என்றும் கூறுவர். குழந்தையின் பதின்மூன்றாம் மாதத்தில் பாடப்பெறும். 'மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்' என்பதற்கொப்ப குழந்தையை அருகழைத்து ஆரத் துய்க்கும் ஊற்றின்பத்தைப் பெறத் துடிக்கும் உண்மையை இப்பருவத்தால் உணரலாம். இப்பருவத்தில் புலவர்கள் தமது அன்பு ஈடுபாட்டை மிகுதியும் வெளிப்படுத்திப்பாடுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/194&oldid=1595083" இலிருந்து மீள்விக்கப்பட்டது