உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் -34 *

6. வருகைப் பருவம்

(ஆசிரிய விருத்தம்)

தொழுதெழு பவருளத் துறைகின்ற இறையவன் துணைதரு செங்கழல்போல்

துலங்கிடு மிணைகழற் சிலம்பொலி ஒலியினைத் துணிகடல் போலெழுப்ப

உழுதிடு மொருசெயில் உழவன்றன் பொழுதினை யுணர்வொடு போக்குதல்போல்'

ஒளியுமிழ் தமிழெனுங் கழனியிற் பொழுதினை யொருங்குறத் தேக்கியவன்

பழுதறு மொழிபல பயின்றவை தனிலுறு

பயன்தனை நன்குணர்ந்து பகைநெறி யொருசிறு துளியுமி லாதருட்

பரிவுடன் தேர்ந்தெடுத்து

வழுதியர் புரந்தசெந் தமிழினை யொலித்தவன்

வருகவே நீவருகவே

வளர்தமிழ்ப் புவிக்கென வள்ளுவ ராண்டினை

வழங்கினை நீ வருகவே.

51

1. ஓரேருழவனின் முயற்சியைப்போல அடிகள் மொழிநலம் பேணலையே தம் கருத்தாய்க் கொண்டு வாழ்ந்தார்.

6

2. பாண்டியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/195&oldid=1595084" இலிருந்து மீள்விக்கப்பட்டது