உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

குழைதரு மெழிலொளி யுடனரை மணிதர

குரை'கிண் கிணியெழுப்ப

குறுந்தொடி சதங்கைபொற் சிலம்புகள் கலின்கலில் அறையா தொலிமுழக்க

மழைதரு முகில்நிகர் கருங்குழல் அலைந்திட

மயக்கே பு னைந்தொளிர

மதுமல ரிணைவுறச் செறிவுட னொளிதரும்

மணிச்சூ ழியம்பொருத்த

கழைமொழி? மழலையை யுதிர்த்திடு மொருசிறு

கனிவா யமுதுசிந்த

கருவிழி யிருசிறு மலரளி யெனச்சுழல்

கலந்தே யொளியுமிழ

வழையிணை கழலிணை மெதுவெடுத் தருகினில்

வருகவே நீவருகவே

வளர்தமிழ்ப் புவிக்கென வள்ளுவ ராண்டினை வழங்கினை நீவருகவே.

1. ஒலி

2. கரும்புபோல் இனிய சொல்

3. சுரபுன்னை

171

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/196&oldid=1595085" இலிருந்து மீள்விக்கப்பட்டது