உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மறைமலையம் -34 *

மருவார் கொன்றை மதிசூடி

மன்றுள் ளாடும் பெருமானை

மனத்திற் கொண்டு திகழுமுழு

மதியே வருக வுளக்கோவில்

தருவா ரென்றே தவஞ்செய்யுந்

தளிராம் செந்த ரத்துக்குத்

தனையே தந்து நிழலீந்த

தருவே வருக தனித்தமிழை

யுருவா யாக்கி யுலகளித்த

வுயிரே வருக வுயர்சைவ

வொளியே வருக மறைமலையா

யுயர்ந்தாய் வருக வுண்ணவுண்ண

வருவா னமுதே தமிழ்தந்த

வாழ்வே வருக வருகவே

வழுவாச் செழுமைப் புகழுடையாய்

வருக வருக வருகவே

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/203&oldid=1595092" இலிருந்து மீள்விக்கப்பட்டது